என்னங்கடா கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்துறீங்க?..கோபத்தில் முரளி செஞ்ச வேலையால் ஆடிப்போன படக்குழு!..
தமிழ் சினிமாவில் சாதுவான ஹீரோவாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் முரளி. தமிழ் மட்டுமில்லாமல் கன்னட மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ரசிகர்கள் மத்தியில் ஒரு பாடகராக சாதுவான காதலராக மட்டுமே நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
இவரின் கெரியரில் மிகவும் பேசப்பட்டப் படம் இதயம் திரைப்படம். இந்த படத்தின் மூலம் பெண் ரசிகைகளிடம் மிகவும் பரீட்சையமானார். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விக்ரமன் இயக்கிய புது வசந்தம் திரைப்படம் தான் இவரை ஒரு நட்சத்திரமாக திரையுலகிற்கு காட்டியது.
இதையும் படிங்கள் : என்னை காதலித்தாரா ராமராஜன்?? ரொம்ப கஷ்டமா இருந்தது… சீரியல் நடிகையின் வாழ்க்கையில் நடந்த சோகம்..
இது ஒரு நண்பர்கள் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக அமைந்திருக்கும். இதில் நடிகை சித்தாரா நாயகியாக நடித்திருப்பார். முரளியுடன் சார்லி, ஆனந்த பாபு ஆகியோர் நடித்திருப்பர். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் துணை இயக்குனராக பணியாற்றியிருப்பார். இந்த படத்தில் நடிக்கும் போது முரளியின் கோவம் வெளிப்பட்டது என ஆனந்த பாபு கூறினார்.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக முரளியுடன் ஆனந்த பாபு, சார்லி ஆகியோர் சென்றிருக்கின்றனர். செட்டுக்கு போய் 5 நாள்கள் ஆகியும் இவர்களுக்கு உண்டான ஷார்ட்டுகள் வரவில்லையாம். ரவிக்குமாரிடம் ஆனந்த பாபு கேட்க என்னப்பா செய்யுறது ? இயக்குனர் சொன்னால் தானே எடுக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான முரளி ஆனந்த பாபுவிடம் நான் கொஞ்சம் வெளில போய்விட்டு வருகிறேன் என்று சென்று விட்டாராம். வெகு நேரம் ஆகியும் வரவில்லையாம். மறு நாளும் வரவில்லையாம். அன்றைக்கு தான் ஷார்ட் என சொல்லி இவர்களை அழைக்க முரளி மட்டும் அங்கு இல்லையாம்.
இதையும் படிங்கள் : நயன்தாராவுக்கு கறார் கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்..அம்மணி ரியாக்ஷன் என்ன தெரியுமா?….
உடனே விக்ரமன், ரவிக்குமார் ஆகியோர் என்னாச்சு என்று கேட்க நடந்ததை ஆனந்த பாபு கூறியிருக்கிறார். என்னப்பா இப்படி பண்ணிட்டாரு என்று இயக்குனர் புலம்பினாராம். உடனே வீட்டில் போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று ஆனந்த பாபு முரளி வீட்டுக்கு செல்ல அவரது மனைவியிடம் கேட்டாராம். முரளி மாடியில் இருப்பதாக மனைவி சொல்ல ஆனந்த் பாபு இன்றைக்கு தான் ஷார்ட். வரச்சொன்னார்கள் என சொல்லியிருக்கிறார். ஆனால் முரளி வரமறுத்திருக்கிறார். இனிமேல் இப்படி நடக்காது என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். வா போகலாம் என்று முரளியை அழைத்துக் கொண்டு போனாராம் ஆனந்த பாபு.