ஃபீல் பண்ணாதீங்க பாஸ்..நான் நடிக்கிறேன்.. பாலாவுக்கு வாக்குறுதி கொடுத்த நடிகர்….

Published on: December 21, 2022
surya2_Cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் சேது திரைப்படம் மூலம் இயக்குனரானவர் இயக்குனர் பாலா. இவர் இயக்குனர் பாலு மகேந்திராவின் சிஷ்யர் ஆவார். விக்ரமை வைத்து இவர் சேது திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதன்பின் நந்தா, பிதாமகன், நான் கடவுள், தாரை தப்படை, அவன் இவன், நாச்சியார் என சில படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

எந்த ஒரு இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது போராட்டம்தான். ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாளர், நடிகர் என அலைய வேண்டும். ஹீரோ ஓகே சொன்னாலும் தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார். ஒரே கதையை பல நடிகர்களுக்கும் சொல்ல வேண்டும். எது கூடி வருகிறதோ அவரை வைத்து படம் எடுக்க வேண்டும். இதுதான் அறிமுக இயக்குனர்களின் நிலைமை.

Sethu2

சேது கதையை வைத்துக்கொண்டு பாலா போராடியது தனிக்கதை. பல ஹீரோக்களிடம் கதை சொல்லி பார்த்தார். ஆனால், ‘நான் மொட்டை அடிக்க வேண்டுமா…அதெல்லாம் முடியாது’ என அப்படத்தில் நடிக்க மறுத்தனர். ஒருவழியாக விக்ரமை வைத்து அப்படத்தை இயக்கி முடித்தால் படம் வியாபாரம் ஆகவில்லை. இப்படத்தை பார்த்த வினியோகஸ்தர்களுக்கு மட்டும் 100 முறை போட்டு காட்டினாராம் பாலா. ஆனால், யாரும் வாங்கவில்லை.

ஒருவழியாக படம் ரிலீஸானல் போஸ்டர் ஒட்டக்கூட பணமில்லை. எனவே, நடிகர் விக்ரம் தன் சொந்த காசை போட்டு போஸ்டர் அடித்து சென்னையில் பல இடங்களுக்கும் அவரே சென்று போஸ்டர் ஒட்டிய கதையெல்லாம் நடந்தது. படம் வெளியாகி பத்திரிக்கைகள் இப்படத்தை பற்றி பாராட்டி பேசி படத்தை வெற்றி பெற வைத்தன.

murali
murali

ஆனால், சேது படத்தின் கதையை பாலா தூக்கிக்கொண்டு அலைந்த போது, பல நடிகர்கள் கதையை நிராகரித்த போது, ஒரு நடிகர் ஆர்வமாக நடிக்க முன்வந்தார். அவர்தான் நடிகர் முரளி. பாலாவிடம் கதையை கேட்டதும் ‘நான் நடிக்கிறேன் பாஸ். நீங்கள் யாரும் பின்னாலும் அலைய வேண்டாம். இப்போது நடித்து வரும் படத்தை முடித்துவிட்டு வருகிறேன். நான் எப்போது மொட்டை அடிக்க வேண்டும்’ என ஆர்வமாக கேட்டு பாலாவுக்கு வாக்குறுதி கொடுத்தவர். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் பின் விக்ரம் நடித்தார்.

அந்த நன்றி உணர்ச்சிக்காகத்தான் பாலா அதர்வாவை வைத்து பரதேசி படத்தை இயக்கினார். தற்போது தன்னுடைய புதிய படத்திலும் அதர்வாவை பாலா நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 18வருடங்கள் சபரிமலைக்கு மாலை போட்ட விஜயகாந்த்.. திடீரென நிறுத்திய காரணம் என்னனு தெரியுமா?..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.