கேப்டன் விஜயகாந்த் இறந்ததும் தமிழ்த்திரை உலகமே கலங்கிப் போனது. எதிர்பார்க்காத அளவு அவருக்கு மக்கள் கூட்டம் இறுதி அஞ்சலியில் பங்கேற்றதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.
இந்த முக்கியமான நிகழ்வில் வடிவேலு பங்கேற்கவில்லை என்பது ஊரறிந்த விஷயமாகிவிட்டது. இதற்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி வருகின்றனர். இந்த வேளையில் விஜயகாந்த், வடிவேலு என இருவருடனும் இணைந்து நடித்த காமெடி நடிகர் முத்துக்காளை என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
பூந்தோட்ட காவல்காரன், கூலிக்காரன்னு பல படங்களில் விஜயகாந்த் நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அவருடன் இணைந்து நான் நடித்த முதல் படம் தவசி. அடுத்த 2 வருடங்களில் நிறைஞ்ச மனசு படத்தில் நடித்தேன்.
நிறைஞ்ச மனசு படத்துல அவரோட ஒரு சீன்ல நான் நடிக்கும்போது 10 டேக் போச்சு. நான் சுத்தி சுத்தி டைவ் அடிப்பேன். அவரு கரெக்டா என் தலையில கையை வைப்பாரு. அது கரெக்டா வரல. ஆனா கேப்டன் ஒரு தடவை கூட என்னய்யா…ன்னு கேட்கல. அதுவும் மதிய வெயில். 12 மணி. ஒரு பாலத்துல எடுக்குறாங்க. அவரு நினைச்சா விடுய்யா… இந்த சீனே வேணாம்னு சொல்லிருக்கலாம்.
இதையும் படிங்க… அஜித்தோடு ஒரே மோட்டிவ் இதுதான்! சினிமாவை விட சுற்றுப்பயணத்தில் ஆர்வம் இருக்க காரணம் இதுதானா?
ஆனா அவரு பொறுமையா இருந்தாரு. இன்னிக்கும் அந்தப் படத்தை நினைச்சிப் பார்ப்பேன்.அடுத்து பேரரசு படத்துல நடிச்சேன். இந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் எனக்கு நல்ல பேரு கிடைச்சது. அதன் பிறகு எங்கள் ஆசான், சுதேசி, அவரோட மகன் நடித்த சகாப்தம் ஆகிய படங்களில் நடிச்சிருக்கேன்.
சினிமா டெக்னீசியன்ல இருந்து நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாட்டைக் கொடுத்ததும் கேப்டன் தான். அதனால தான் அவரு இன்னைக்கும் நிக்கிறாரு. போலீஸ் ட்ரெஸ்சுக்கு கவுரவம் கொடுத்ததும் கேப்டன் தான்.
கேப்டனனுக்கு மட்டுமல்ல. போண்டாமணி, விவேக், மயில்சாமி, மனோபாலா என யாருடைய இறுதிச்சடங்கிலும் வடிவேலு பங்கேற்கவில்லை. இதுக்கு என்ன காரணம்னு அவரா சொன்னா தான் உண்டு. அவரு சொல்லாத வரைக்கும் நம்மளா சொல்லிக்கிட வேண்டியதுதான். சிங்கமுத்து, வடிவேலு பிரச்சனை எப்படியோ அது மாதிரி தான் இதுவும் என்கிறார் முத்துக்காளை.
இதையும் படிங்க… கவர்ச்சியே காட்டாமல் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப் போட்ட நாயகிகள்… இப்படியும் இருக்காங்களா?
உண்மையைத் தெரியணும்னா அவங்க ரெண்டு பேரையும் உட்கார வைத்துப் பேசணும். இல்லேன்னா ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதே போல இந்த விஷயத்துக்கு ஏன் வரலேங்கறதை அவரா சொன்னாதான் தெரியும். அதுவரைக்கும் நாம பொறுமையா தான் இருக்கணும். கேப்டன் இறந்ததுக்கு 2 நாள் நான் சாப்பிடல.
மேற்கண்ட தகவலை காமெடி நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துடன் இணைந்து 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் முத்துக்காளை. இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல. ஸ்டண்ட் மாஸ்டரும் தான்.
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…