கொளுத்திப் போட்ட தீ பத்திக்கிட்டு எரியுது! பொட்டியை தூக்கிட்டு பறந்த மிஷ்கின் – ஆடிய ஆட்டமெல்லாம் என்னாச்சு?

Published on: July 28, 2023
mysskin
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். திரில்லர் கதைகளை கொடுப்பதில் ஒரு ஆகச்சிறந்த இயக்குனராக கோலிவுட்டில் வலம் வருகிறார். மிஷ்கின் படங்கள் பெரும்பாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களை ஒத்து காணப்படும். அந்த அளவுக்கு துப்பறியும் கதைகளத்திலேயே வடிவமைத்திருப்பார்.

mysskin1
mysskin1

பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளர், சைக்கோ போன்ற படங்கள் அப்படியேதான் எடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே மிஷ்கின் மீது ஒரு தனி மரியாதையே இருந்து வந்தது. அந்த அளவுக்கு இவரின் படங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

இதையும் படிங்க : இதெல்லாம் ஒரு நடிப்பா? செல்வமணியை செவுல்லயே விட்ட பானுமதி – யாரையும் விடாது போல இந்தம்மா

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். நடிப்பில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருப்பார் மிஷ்கின். நடிக்க வேண்டும் என்று அவரது ஆசை இல்லை. இந்தக் கதைக்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி வரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

mysskin2
mysskin2

சமீபத்தில் கூட லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து டிவிட்டர் பக்கத்தில் நான் விஜயை அடித்தேன், முகமெல்லாம் ரத்தம் என்று விளக்கமாக கூறி பெருமையாக பேசியிருந்தார். அதோடு சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாவீரன் படத்திலும் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் மிஷ்கினின் நடிப்பை அனைவரும் பாராட்டினார். இந்தப் படத்திற்கு பிறகு ஏராளமான படவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடிப்பே வேண்டாம் என்று மிஷ்கின் சேலத்துக்கு போய்விட்டாராம். அங்கு ஏதோ ஒரு கதை விவாதத்தில் இருக்கிறாராம். ஏன் இந்த முடிவு என ஆராய்ந்ததில் ஏற்கெனவே அறிந்த விஷயம் தான் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.

mysskin3
mysskin3

மாவீரன் படத்தில் மிஷ்கின் யாரையும் நடிக்க விடவில்லை என்றும் எப்பொழுதும் ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார் என்றும் பரவியது. இது மற்ற பிரபலங்கள் இயக்குனர்கள் காதுக்கும் செல்ல மிஷ்கினை தேடி படவாய்ப்புகளே வரவில்லையாம்.

இதையும் படிங்க : ஒரு சீன் கூட இந்தியாவில் எடுக்க கூடாது!.. கண்டிஷன் போட்ட அஜித்.. விடாமுயற்சி செம அப்டேட் வந்துருச்சி!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.