பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? 'வணங்கான்' திரைப்படத்தில் அதிரடியாக இறங்கிய மற்றுமொரு பிரபலம்
பாலா இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டு வருகிறது வணங்கான் திரைப்படம். சூர்யா இருக்கிற வரைக்கும் தான் படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தன.
ஆனால் சூர்யா போனதிலிருந்து படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.
இன்னும் கொஞ்சம் நாட்களில் படம் முடியும் கட்டத்திற்கு வந்து விடுமாம். பொதுவாக பாலாவின் படம் என்றாலே ரிகர்சலை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுப்பாராம்.
ஏனெனில் அப்படி எடுத்து நடித்தால் தான் அவர் நினைத்தது படத்தில் வெளிப்படுமாம். மேலும் அடிக்காத குறையாக சாட்டையை எடுக்காத குறையாக வந்து பார் என்று நடந்து கொள்வாராம் பாலா.
அதனாலேயே அவர் கூட்டணியில் நடித்த பல முன்னணி நடிகர்கள் மீண்டும் அவருடன் சேர தயங்குகிறார்கள். ஆனால் அதை எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நான் இப்படித்தான் என் வேலை இப்படித்தான் என அவர் போக்கில் போய்க் கொண்டிருக்கிறார் பாலா.
அதனால்தான் முன்னதாக சூர்யாவை வைத்து எடுத்த போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சில பல பிரச்சனைகள் வந்து அதன் பிறகு தான் அருண் விஜய் இந்த படத்தில் இணைந்தார்.
இந்த நிலையில் பாலாவுக்கே டப் கொடுக்கும் வகையில் வணங்கான் திரைப்படத்தில் இணைந்திருக்கிறாராம்.
அவர் வேறு யாரும் இல்லை இயக்குநரும் நடிகருமான மிஷ்கின். இவரே ஒரு கோபக்காரர். இவரை வைத்து பாலா எப்படி இயக்கப் போகிறார் என்ற ஒரு பரபரப்பு தான் இப்போது கோடம்பாக்கத்தில் நிலவுகின்றது.