இந்தியத் திரை உலகிலேயே இப்படி ஒரு கேரக்டரை அதுவும் இந்த வயதில் யாராலும் செய்ய முடியாது...!
கதாநாயகன், பிசினஸ்மேன், தொகுப்பாளர், தயாரிப்பாளர். 6 அடி உயரம். இவர் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டு இப்ப உள்ள இளம் ஹீரோக்களுக்குக் கூட இவர் டப் கொடுக்கிறார் என்றால் நீங்களே அவரது திறமையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் தான் நாகர்ஜூனா. இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
1989ல் இருந்தே இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் ஹிட் அடிக்கும். 29.8.1959ல் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகேஸ்வரராவ் - அன்னபூர்ணா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
தற்போது இவருக்கு 62 வயது. ஆனால் யாரும் நம்பமுடியாது. அந்த அளவுக்கு பாடியை பிட் ஆக வைத்துள்ளார். இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். 3 அக்கா உள்ளனர். சென்னையில் தான் பிறந்தார். தொழில் விஷயமாக இவரது தந்தை ஐதராபாத்துக்கு வருகிறார்.
12ம் வகுப்பு வரை நாகர்ஜூனா ஐதராபாத்தில் தான் படித்தார். இவர் அண்ணா பல்கலையில் பி.இ.மெக்கானிக்கல் படித்தார். அடுத்து உயர்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். இவர் படிக்கும்போதே லட்சுமியைக் கல்யாணம் செய்ய பேசி முடிக்கின்றனர்.
இவர் யார் என்றால் நடிகர் வெங்கடேஷின் அப்பா தயாரிப்பாளர் டி.ராமநாயுடுவின் மகள். ராமநாயுடுவும், நாகேஷ்வரராவும் நல்ல நண்பர்கள். 1984ல் கல்யாணம் சென்னையில் நடந்து முடிந்தது.
நாகர்ஜூனா சிறுவயதில் அப்பா நடித்த பல படங்களில் குழந்தை வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடிக்க வரணும். ஹீரோவாகணும்னு அப்பா சொன்னப்ப அவரும் யோசிச்சிட்டு சரின்னு சொல்லிடறாரு.
ஆனா அவரோட மனைவி லட்சுமிக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கல. இதனால நிறைய சண்டை வருது. 1986ல் அவர் தனது முதல் படமாக விக்ரம் பண்ணுகிறார்.
நடிகை ஷோபனா தான் ஹீரோயின். ஹீரோ என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் இது.
அதே ஆண்டுல அதாவது 1986ல் தான் நாகசைதன்யா பிறக்கிறார். அவரோட முதல் படம் சக்சஸ். ஆனா மனைவி லட்சுமி விவாகரத்து வாங்குகிறாள். பின்னர் சரத்விஜயராகவன் என்ற ஒரு தமிழரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிறார்.
மஜ்னு, சங்கீர்த்தனா ஆகிய படங்களில் நடித்தார். இதில் மஜ்னு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஸ்ரீதேவி கூட ஆகரிபோராட்டம் படம் பண்ணினார். செம ஹிட்.
மணிரத்னம் டைரக்ஷன்ல கீதாஞ்சலி படம். இது தேசிய விருது பெற்றது. 1989ல் ரிலீஸான சிவா படம் தான் இவரது வாழ்க்கையிலேயே திருப்புமுனையாக அமைந்த படம். ராம் கோபால் வர்மாவுக்கு இது முதல் படம்.
இது தான் நாகர்ஜூனாவை சூப்பர் ஆக்டராக்கியது. பாலிவுட்டிலும் சிவா என்ற பெயரில் அவரே நடிக்கிறார். அங்கும் சூப்பர்ஹிட். நிறைய ரசிகர்களை உருவாக்கித் தந்த படம் இதுதான்.
இந்தப் படத்தில் தான் நாகர்ஜூனா அமலா ஜோடி முதன்முறையாக ஜோடி சேர்கின்றனர். அதன்பிறகு நிர்ணயம் படத்தில் காதலை சொல்லி 1992வில் திருமணம் செய்து கொள்கின்றனர். 1994ல் அகில் அக்கினேனி பிறக்கிறார்.
இப்ப வரைக்கும் தனது படங்களில் வித்தியாசமான திரைக்கதைகளாக தேர்வு செய்து தான் நாகர்ஜீனா நடிப்பார். அதனால் அவரை தெலுங்கு திரை உலகில் செல்லுலாய்டு சயின்டிஸ்ட் என்று தான் அனைவரும் அழைப்பர். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டாயின. 1996ல் நின்னே பெல்லடத்த என்ற படத்தில் நடிகை தபுவுடன் நடித்தார்.
இந்தப்படத்தில் தயாரிப்பாளராகவும் இருந்தார். படம் மாஸ் ஹிட் ஆனது. 1997ல் அன்னமயா என்ற படத்தில் நடிக்கிறார். இது தெலுங்கு திரை உலகில் மெகா ஹிட்டான படம். முதல் 15 நாள் படம் ஓடல. அதன்பின்னர் செம மாஸானது. இந்தப்படத்துக்காக நாகர்ஜூனா பிலிம்பேர் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1997ல் இவர் நடித்த ரட்சகன் படம் தமிழில் வெளியாகிறது. சுஷ்மிதா சென் ஹீரோயின். அந்தக்காலத்தில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான தமிழ்ப்படம் இதுதான். பிக்பாஸ், நீங்களும் கோடீஸ்வரராகலாம் ஆகிய டிவி ஷோக்களை தெலுங்கில் செய்துள்ளார்.
2019ல் மன்மதடு 2 படத்தைப் பண்ணினார். இந்தப்படத்தில் 32 வயதுக்குள் உள்ள ஒரு கேரக்டரை செய்துள்ளார். இது போல இந்தியத்திரை உலகிலே யாராலும் செய்ய முடியாது. அவரோட 2 மகன்களையும் திரை உலகில் இறக்கிவிட்டு நடிகராக்கியுள்ளார். ஸ்டார்மா என்ற டிவி சேனலையும் நடத்தி வருகிறார். இதுவரை 3 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் வெளியான ரட்சன் என்ற தமிழ்ப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.