நாகேஷ்… தமிழ்சினிமாவைத் தன் அசாத்திய நகைச்சுவையால் கட்டிப்போட்ட ஓர் உன்னத கலைஞன். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல. நாம் அறிந்திடாத பல தகவல்கள் இவரைப் பற்றி உள்ளன. பார்க்கலாமா…
நாகேஷின் இயற்பெயர் நாகேஷ்வரன். கன்னட பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். தாராபுரம் பகுதியில் கன்னடர்கள் வாழும் குறிஞ்சிப்பாடியில் பிறந்தார். தந்தை கர்நாடகா மாநிலம் அரிசிக்கரே பகுதியில் ரயில் நிலையத்தில் வேலை பார்த்தார். சிறுவயதில் நாகேஷ் அவர்களது நண்பர்களால் குண்டு ராவ் என்று அழைக்கப்பட்டாராம்.
தாராபுரத்தில் பள்ளிப்படிப்பும், கோவையில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார். படிப்பு முடிந்ததும் திருப்பூர் ரயில்வேயில் எழுத்தாளராக வேலை பார்த்தார். சிறுவயதில் இருந்தே நாடகங்கள் மேல் கொண்ட பற்றால் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.
மணியன் எழுதிய டாக்டர் நிர்மலா நாடகத்தில் இவர் தை தண்டபாணி என்ற கேரக்டரில் நடித்தார். அது ஒரு நோயாளி வேடம். தை தை என்று குதித்ததால் தை நாகேஷ் என்றும், பின்னர் தாய் நாகேஷ் என்றும் அழைத்தனர். இவர் அறிமுகமான முதல் படம் தாமரைக்குளம். 1959ல் வெளியானது. ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் இவரது நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
இதில் இவரது ஜோடி மனோரமா. கே.பாலசந்தரின் சர்வர் சுந்தரம் இவரது திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல். திருவிளையாடலில் தருமியாக நடித்த இவரது கேரக்டரை இப்போது வரை மறக்க முடியாது. அதன்பின் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் சக்கை போடு போட்டார்.
கமலின் சிறந்த நண்பர். அதே நேரம் கமல் இவரது தீவிர ரசிகர். இவரது அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என நடித்த அத்தனை படங்களிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…