ஒருநாள் இது நடக்கும்!.. ஏ.வி.எம் சரவணனிடம் சவால் விட்ட நாகேஷ்!.. அட அது அப்படியே நடந்துச்சே!....

60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு வேலையை விட்டவர் இவர். கவிஞர் வாலியும் நாகேஷும் ஒரே அறையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடியவர்கள். கவிஞர் வாலி சினிமாவில் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருந்த போது நாகேஷ் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்ததுமே வேலையை விட்டார் நாகேஷ். தொடர்ந்து சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. அப்படியே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் வாய்ப்பு கிடைக்க தனது காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார் நாகேஷ். ஒரு நாளில் 5 அல்லது 6 படங்களில் நடிக்குமளவுக்கு பிசியான நடிகராகவும் மாறினார் நாகேஷ்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…
ஒல்லியான தேகம், அம்மை தழும்பு கொண்ட முகம் என மைனஸ் இருந்தாலும் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்தார். 90களில் கவுண்டமணி எப்படி இருந்தாரோ அப்படி 60களில் ஒரு படத்தின் வெற்றிக்கு நாகேஷ் தேவைப்பட்டார். நாகேஷுக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களும் படப்பிடிப்பு தளத்தில் காத்திருப்பார்கள்.
நாகேஷ் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான வீரத்திருமகன் படத்தில் நாகேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு விபத்தில் சிக்கியதால் நடிக்கவில்லை. அதன்பின் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான நானும் ஒரு பெண் படத்தில் நடித்தார் நாகேஷ்.
இதையும் படிங்க: ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..
இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளம் பேசுவதற்காக நாகேஷை தனது அலுவலகத்திற்கு வரசொன்னார் ஏவிஎம் சரவணன். அப்போது 10 ஆயிம் சம்பளம் கேட்டார் நாகேஷ். ஆனால், சரவணனோ 5 ஆயிரம் கொடுப்பதாக சொல்ல நாகேஷ் சம்மதிக்கவில்லை. நாகேஷ் பிடிவாதமாக இருக்க கடைசியில் பேரம் பேசி 6 ஆயிரம் ரூபாய்க்கு நடிக்க ஒப்புக்கொண்டார் நாகேஷ்.
அப்போது ‘சரவணன் நான் ஏதோ சம்பளத்தில் கறாராக இருப்பதாக நினைக்க வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளில் நான் என்ன சம்பளம் கேட்கிறோனோ அதை நீங்கள் கொடுப்பீர்கள்’ என சொல்லிவிட்டு போயிருக்கிறார். அவர் சொன்னது போலவே சில வருடங்களில் ஏவிஎம் தயாரித்த சர்வர் சுந்தரம் படத்திற்கு நாகேஷ் என்ன சம்பளம் கேட்டாரோ அதை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தார் ஏவிஎம் சரவணன்.
இதன்மூலம் மற்றவர்கள் நம்மை நம்புவதை விட நாம் முதலில் நம்ப வேண்டும் என காட்டியிருக்கிறார் நாகேஷ்.