வதந்தியை தவிடுபொடியாக்கிய இயக்குனர்.. கொலைவழக்கில் சிக்கிய நாகேஷை படத்தில் எப்படி காட்டினார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்றே படைக்கப்பட்டவர் நடிகர் நாகேஷ். திறமையிருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிகனாகலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் நாகேஷ். சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, என மாபெரும் கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமயத்தில் மெலிவான உடல், அம்மை தழும்பு என சினிமாவிற்கு சற்றே சம்பந்தம் இல்லாமல் வந்தவர் தான் நடிகர் நாகேஷ்.

nagesh1

nagesh1

பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நாகேஷ். முதன் முதலில் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகனாக அறிமுகமானார் நாகேஷ். ஆனால் நடிப்பில் அந்த அளவு வெளிப்பாடு இல்லையாதலால் அங்கு இருந்தவர்கள் அவரை கடிந்திருக்கின்றனர்.

அப்போது நாகேஷுக்கு பக்க பலமாக இருந்து ஆறுதல் சொன்னவர் எம்.ஆர்.ராதா. நடிப்பையும் தாண்டி நடனத்தில் கைதேர்ந்தவர் நாகேஷ். இவர் நடித்த பல படங்கள் பெரும் வரவேற்பை பெற்றாலும் தில்லான மோகனாம்பாள் படம் என்றாலே முதலில் நம் நியாபகத்திற்கு வருவது நாகேஷ் தான்.

nagesh2

nagesh2

அந்த அளவுக்கு அந்தப் படத்தில் வெயிட்டான ரோலாக அமைந்தது நாகேஷ் நடித்த சவடால் வைத்தி கதாபாத்திரம்.
ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நாகேஷுக்கு முன்னாடி நடிக்க ஆசைப்பட்டது அந்த படத்திற்கு கதை வசனம் எழுதிய கொத்தமங்கலம் சுப்பு. தன்னை நினைத்தே அந்த கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

ஆனால் படத்தின் இயக்குனரான ஏ.பி. நாகராஜன் இந்த பாத்திரத்திற்கு நாகேஷ் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று உறுதியாக இருந்தார். அதனால் அவரின் நிர்வாகி ஒருவரை அழைத்து நாகேஷை அழைத்து வர அனுப்பினார். ஆனால் அந்த சமயம் நாகேஷ் அவரின் மைத்துனரின் கொலைவழக்கில் சந்தேகப்படும்படியான நபராக இருந்தாராம். அதுவும் இது ஒரு வதந்தியாகவே இருந்திருக்கிறது.

nagesh3

ap nagarajan

இதை அந்த நிர்வாகி கூறிய போது ஏ.பி, நாகராஜனோ என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த கதாபாத்திரத்திற்கு நாகேஷை தவிர வேறு யார் நடித்தாலும் நன்றாக இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அவர் சொன்னது போலவே இன்றளவும் அந்த கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

Related Articles

Next Story