அட கண்ட்ராவியே.. இப்படியா பேசுறது?.. நடிகர் பேசிய வசனத்தை கேட்டு பதறி ஒடிய நாகேஷ்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ். நாடக மேடைகளில் தனது திறமையை வளர்த்த நாகேஷ் அதன் பின் படிப்படியாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் என தனது பயணத்தை அதிகரித்துக் கொண்டே சென்றார்.
தனது உடல் அசைவு, பாவனைகளால் நகைச்சுவையை முன்னிறுத்தியவர். இன்று வரை அவரின் இடத்தை யாராலும் அடைய முடியவில்லை. நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்திலும் கைதேர்ந்தவர் நாகேஷ். கதாநாயகனாகவும் நாகேஷ் நடித்த படங்கள் வெற்றியை பதிவு செய்தது.
நடிப்பில் எப்படி கைதேர்ந்தவரோ அதே போல செண்ட்மெண்ட் காட்சிகளிலும் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவரும் கூட. இந்த நிலையிக் நடிகர் நாகேஷுக்கும் தனக்கும் இருக்கும் நட்பை நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
நாகேஷும் வெண்ணிறாடை மூர்த்தியும் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே நன்கு தெரிந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதன் பின் சினிமாவில் இருவரும் சேர்ந்து நடிக்கக் கூடிய வாய்ப்புகளும் வந்து திரையில் கலக்கினர். பெரும்பாலும் வெண்ணிறாடை மூர்த்தியின் வசனங்கள் இரட்டை அர்த்தம் தரும் வசனங்களாகவே அமையும்.
அப்படி ஒரு வசனத்தை பேசப் போய் நடிகர் நாகேஷ் இன்னும் இவனுடன் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்ன சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இருவரும் ஒரு படத்தின் காட்சிப்படி நாகேஷின் மகனுக்கும் வெண்ணிறாடை மூர்த்தியின் மகளுக்கும் வெகு நாள்களாயும் திருமணம் ஆகாமலேயே இருக்கின்றன.ஒரு கட்டத்தில் நாகேஷ் வெண்ணிறாடை மூர்த்தியிடம் ‘அங்கப் பிரதட்ஷனமும் பண்ணிட்டேன், அபிஷேகமும் பண்ணிட்டேன், விரதமும் இருந்துட்டேன், இருந்தாலும் இன்னும் என் மகனுக்கு திருமணம் ஆகவில்லையே’ என்று புலம்பும் காட்சி.
அதைக் கேட்ட வெண்ணிறாடை மூர்த்தி ‘ இனிமே நாக்க வைச்சு தான் டிரை பண்ணிப் பாக்கனும்’ என்று ஸ்பாட்டிலேயே இந்த வசனத்தை கூறியிருக்கிறார் மூர்த்தி. இதைக் கேட்டதும் நாகேஷ் ஷாக் ஆகி உட்கார்ந்திருந்தவர் சற்று முன்னாடி வர இயக்குனரான ராம நாராயணன் சட்டென கிழம்பி விட்டாராம்.
உடனே வெண்ணிறாடை மூர்த்தி ராம நாராயணனிடம் இந்த வசனம் வேண்டானா வைக்க வேண்டாம் என்று சொல்ல ராம நாராயணன் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம். இதனை அடுத்து நாகேஷ் ‘இவன் என்னடா கண்ட்ராவியான வசனத்தை பேசிட்டு அலையுறான், நான் இவன் கூடெல்லாம் நடிக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். ஆனால் அந்த வசனம் இன்னும் அந்தப் படத்தில் இருக்கிறதாம்.
ஆனால் வெண்ணிறாடை மூர்த்தி எந்தப் படம் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் படத்தின் காட்சியை வைத்துப் பார்க்கும் போது பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த ‘புருஷன் என் அரசன்’ திரைப்படமாக இருக்கலாம் என்று தெரிகிறது.