நான் செய்தால் நஷ்டம்.. நீங்கள் மட்டும் செய்யலாமா?!. எம்.ஜி.ஆரை கேள்வியால் மடக்கிய நாகேஷ்!...

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு என்பது முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது. கதாநாயகன், கதாநாயகி, வில்லன் போல காமெடி நடிகர் என்பவர் ஒரு படத்திற்கு முக்கியமானவர். ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதில் காமெடி நடிகர்கள் முக்கியமானவர்கள்.

கவுண்டமணி - செந்தில் இருந்தாலே தியேட்டருக்கு போகலாம் என்பது 90களில் பலரின் மனநிலையாக இருந்தது. அதேபோல்தான், வடிவேலு, விவேக்கும், சந்தானமும். எத்தனையோ திரைப்படங்கள் இவர்களின் காமெடி காட்சிகளில் வெற்றியை பெற்றிருக்கிறது. அப்படி 60களில் காமெடி நடிகர்களின் முக்கியமானவராக இருந்தவர் நாகேஷ்.

இதையும் படிங்க: ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு பணியை விட்டவர் இவர். போராடி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஒல்லியான தேகம், அம்மை தழும்புள்ள முகம் என இருந்தாலும் தனது உடல் மொழியாலும், டைமிங் காமெடியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். மிகவும் திறமையான நடிகர் இவர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் போன்ற நடிகர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நாகேஷ் இருந்தார். ஒருநாளில் 5 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான ஒரு நடிகராக நாகேஷ் இருந்தார். இதனால், எம்.ஜி.ஆர், சிவாஜி கூட நாகேஷுக்காக மணிக்கணக்கில் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்தது எல்லாம் நடந்தது.

இதையும் படிங்க: அவங்க சொன்னா ஓகே!.. எனது வெற்றிக்கு காரணமே அவர்கள்தான்!.. நாகேஷ் சொன்ன சீக்ரெட்!..

‘கலங்கரை விளக்கம்’ என்கிற படத்தில் எம்.ஜி.ஆரும் நாகேஷும் இணைந்து நடிக்கும் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுவிட்டால் படம் முடிந்துவிடும் நிலை இருந்தது. ஆனால், நாகேஷ் மற்ற படங்களில் பிசியாக நடித்து வந்தார். பொறுத்து பொறுத்து கோபமடைந்த எம்.ஜி.ஆர் ஒருநாள் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ‘நாகேஷ் என்னை போன்ற சின்ன நடிகர் எல்லாம் நடித்து முடித்துவிட்டோம். நீங்கள் வந்து படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்’ என சொன்னார்.

பதறிய நாகேஷ் 2 நாட்கள் அப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்து மொத்தம் 18 காட்சிகளில் நடித்து கொடுத்தார். ‘இவ்வளவு வேகமாக வேலை செய்யும் ஒரு நடிகனை பார்த்தது இல்லை’ என நாகேஷை பாராட்டினார் எம்.ஜி.ஆர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நாகேஷ் எம்.ஜி.ஆரிடம் ‘அண்ணே நான் கால்ஷீட் கொடுக்கவில்லை எனில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரும் என சொன்னீர்கள். நீங்கள் எத்தனையோ முறை கால்ஷீட் கொடுத்து கேன்சல் பண்ணி இருக்கீங்க.. அப்போதெல்லாம் நஷ்டம் வராதா?’ என கேட்க வாய் விட்டு சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

 

Related Articles

Next Story