Cinema History
இங்கு நான் மட்டும்தான் விஐபி!. எம்.ஜி.ஆர் வீட்டில் கெத்து காட்டிய நம்பியார்..
திரையுலகில் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் நடித்தவர் நம்பியார். எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அசோகன், ரங்காராவ், எம்.ஆர்.ராதா என பல நடிகர்கள் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்திருந்தாலும் பெரும்பாலான எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார் மட்டுமே.
குறிப்பாக எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும் நடிகராக நம்பியார் மட்டுமே இருந்தார். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நம்பியாரை எங்கேயாவது பார்த்தால் ‘எங்கள் தலைவரையே நீ அடிக்கிறாரா?.. காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வாயா?’ என சண்டையே போடுவார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நம்பியார் அவர்களின் மனதில் பதிந்துபோயிருந்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆரை பார்க்க அவரின் வீட்டிற்கு நம்பியார் சென்றிருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அவரை பார்க்க சில அமைச்சர்களும் சென்றிருந்தனர். நம்பியாரை பார்த்ததும் தூரத்திலிருந்து எம்.ஜி.ஆர் ‘உள்ளே வா’ என சைகை காட்டினார். ஆனால், அங்கிருந்த அமைச்சர்கள் தன்னைத்தான் எம்.ஜி.ஆர் கூப்பிடுகிறார் என நினைத்து உள்ளே செல்ல, கதவை திறந்து பார்த்த எம்.ஜி.ஆர் நம்பியாரை பார்த்து ‘உன்னதான் கூப்பிட்டேன். உள்ளே வாயா’ என்றாராம். அதன்பின் நம்பியார் உள்ளே சென்றிருக்கிறார்.
அப்போது உதவியாளரிடம் அங்கிருந்த எல்லோருக்கும் எம்.ஜி.ஆர் காபி கொடுக்க சொன்னாராம். உதவியாளர் அங்கிருந்த செல்ல அவரை தடுத்து நிறுத்திய நம்பியார் ‘எனக்கு மட்டும் ஒரே ஒரு காபி கொண்டு வா’ என்றாராம். அங்கிருந்த அமைச்சர் ஒருவர் ‘நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’ என விளையாட்டாக கேட்க, அதற்கு நம்பியார் ‘இங்கு நான் மட்டும்தான் விஐபி’ என கெத்தாக சொல்ல எம்.ஜி.ஆரோடு சேர்த்து அங்கிருந்த எல்லோரும் சிரித்துவிட்டார்களாம்.