அந்த ஆங்கர் புள்ள பாவம்யா!.. இப்படியா பீதி கிளப்புவாறு நானி!.. வைரலாகும் வீடியோ!….

தெலுங்கில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நானி. கடந்த பல வருடங்களில் பல முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். இவரின் பல படங்களில் தமிழிலும் டப் ஆகி வெளியாகியிருக்கிறது. ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா, சுதீப் நடித்து வெளியான ஈ படத்திலும் நானி நடித்திருந்தார்.
துவக்கத்தில் காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த நானி ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறினார். அதோடு, தனுஷ், விஜய் சேதுபதி போல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல் வாங்கினார். இவரின் நடிப்பில் வெளியான ஜெர்ஸி, கேங்ஸ்டர், ஷ்யாம் சிங்கா ராய், தசரா, தேவதாஸ் உள்ளிட்ட படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் ஆஹா கல்யாணம், வெப்பம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம். ஆந்திராவில் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உண்டு. தமிழில் சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நானிக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், காலம் இன்னும் கை கூட வரவில்லை.
ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தார். ஒரு வெற்றி கிடைத்தபோது பொறுமையாக நடந்து சென்று ரயில்வே பிளாட்பாரிமில் நின்று ரயில் வரும்போது ‘நான் ஜெயிச்சிட்டேன்’ என சொல்வது போல அந்த மகிழ்ச்சியை கத்தி கொண்டாடும் காட்சியை இப்போதும் பலரும் பல விஷயங்களுக்காக மீம்ஸ் வீடியோவாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு ஜாலி பேட்டி கொடுத்தார் நானி. அப்போது அவரை பேட்டியெடுக்கும் ஆங்கர் பெண் ‘நான் ஒன் டூ த்ரி என சொல்வேன். நீங்கள் கியூட் முகத்தை காட்ட வேண்டும்’ என சொல்லிவிட்டு ஒன் டூ திரி என சொல்ல ‘நானியோ ‘ஏய்’ என குரலை உயர்த்தி கத்தினார். அவர் திடீரென கத்தியம் அப்பெண் பயந்துவிட்டார். இந்த வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து ‘நான் சிங்கிளா இருக்க இதுதான் காரணம்’ என ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள்;
Anchor paavam ya 😂😅pic.twitter.com/eRj67oRqj1
— Kolly Corner (@kollycorner) April 6, 2025