மகனின் ஆசைக்காக கடல் தாண்டி நெப்போலியன் செய்த செயல்!.. இப்படி ஒரு அப்பாவா?!..

by Rohini |   ( Updated:2023-02-02 12:16:41  )
nepo
X

nepolean

தமிழ் சினிமாவில் வில்லனாக தன் பயணத்தை ஆரம்பித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் நெப்போலியன். புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதராக வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் நெப்போலியன்.

nepo1

nepolean

முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின் சில படங்களில் வில்லனாக கலக்கினாலும் கிராமத்து மண்வாசனை பெற்ற நடிகராக இருந்தாலும் அந்தக் கால இயக்குனர்கள் அவரை ஹீரோவாக்க களமிறக்கினர்.

சீவலப்பேரி பாண்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பின் சில படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். 90களுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து பின் அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று இப்போது எந்த பதவியும் வேண்டாம் என்று அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நெப்போலியன்.

அங்கு பெரிய ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தியும் அமெரிக்கா முறையில் விவசாயமும் செய்து வருகிறாராம். அமெரிக்கா போன முக்கிய காரணம் அவரின் மகனுக்காக மட்டுமே என்று ஒரு பேட்டியில் கூறினார் நெப்போலியன். அவருடைய மூத்த மகனுக்கு உடலில் ஏதோ சில பிரச்சினைகள் காரணமாக நடக்க முடியாமல் இருக்கிறார்.

nepo2

nepolean

அவரின் மகன் ஆசைப்பட்டதற்கேற்ப அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக அங்கு சென்றவர் கிட்டத்தட்ட 12 வருடங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். மூத்தமகனின் ஆசையை நிறைவேற்றுவதிலேயே மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் நெப்போலியன்.

இந்த நிலையில் அவரின் மூத்தமகனான தனுஷ் யுடியூப்பில் வேலைபார்க்கும் யுடியூப்பர் ஒருவரின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார். அவரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். உடனே அந்த யுடியூப்பருக்கு அமெரிக்கா வருவதற்கான எல்லா வித செலவுகளை ஏற்றுக் கொண்டு தன் சொந்த டிக்கெட் செலவிலேயே அமெரிக்கா வரவழைத்து மகனின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

இதையும் படிங்க : ‘ஷார்ட் ரெடி’ என்று சொன்னதும் எப்பொழுதும் விஜயகாந்த் செய்யும் முதல் காரியம்!.. இப்படி ஒரு மனுஷனா? வியப்பில் பிரபல இயக்குனர்..

Next Story