அந்த படத்துல நடிச்சதுக்கு எனக்கு கிடைச்சது இதுதான்!… ஃபீலிங்ஸ் காட்டும் நாசர்..

Actor Nasar: தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் நாசர். வில்லனாகவும் சரி, கதாநாயகனாகவும் சரி, தந்தை வேடமானாலும் சரி அனைத்து கதாபாத்திரத்திலும் தன்னை நிரூபித்தவர் நடிகர் நாசர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான கல்யாண அகதிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் வேலைக்காரன், நாயகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென தனி அங்கீகாரத்தையே உருவாக்கினார்.

இதையும் வாசிங்க:58 வயசு நடிகருடன் ஜோடியா நடிக்க மகளை தயார்ப்படுத்தும் தேவயாணி குடும்பம்?.. கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!..

இவரை பெரும்பாலும் நடிகராகவே பலருக்கும் தெரியும். ஆனால் நடிப்பை தாண்டி இவர் ஒரு இயக்குனரும் கூட. மாயன், தேவதை, அவதாரம் என சில திரைப்படங்களின் மூலம் இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கமலுடன் இணைந்து இவர் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் இவர் உண்மையிலேயே வில்லனா என ஆச்சரியபடும் வகையில் அமைந்திருந்தது. அந்த அளவுக்கு தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார் நடிகர் நாசர்.

இதையும் வாசிங்க:அஜித் பட ஹீரோயினுக்கும் எனக்கும் லவ்வா? பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு தனி அங்கீகாரத்தையே பெற்று தந்தது. அதைப்போல் இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் எம் மகன். இப்படத்தில் பரத் கதாநாயகனாகவும் அவருக்கு தந்தையாக நாசர் நடித்திருந்தார். இப்படத்தில் மிகவும் கண்டிப்பாக நடித்திருப்பார். இப்படத்தில் பரத்துக்கு சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

அப்பட ரிலீஸுக்கு பின் நாசருக்கு பலரும் கால் செய்து இப்படத்தில் நான் என் அப்பாவின் கதாபாத்திரத்தையே பார்த்தேன் எனவும் மேலும் சிலர் அழ கூட செய்தனராம். இது குறித்து நாசர் பேசுகையில் தான் நடித்த பல திரைப்படங்களில் இப்படத்திலேயே உணர்ச்சிப்பூர்வமாக மக்களுடன் இணைந்ததாகவும் மேலும் இப்படத்தில் தன் கதாபாத்திரத்தை அப்படி கொண்டு சென்ற திருமுருகனைக்கு அப்புகழ் சென்று சேரும் என மிக நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க:ஹிட் பட இயக்குனர்களை காக்க வைத்து காலி பண்ணும் ரஜினி, கமல்!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..

 

Related Articles

Next Story