Actor Vaadivelu: தமிழ் சினிமாவில் நாகேஷுக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான புகழைப் பெற்றவர் வைகைப்புயல் வடிவேலு. தன்னுடைய முகபாவனையாலும் உடல் மொழிகளாலும் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேலு ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
கவுண்டமணி செந்தில் உச்சத்தில் இருக்கும் போதே வடிவேலு அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு தேவர் மகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
இதையும் படிங்க: முடி வளர்த்தது வேஸ்டா போச்சே! டிராப் ஆகுமா STR 48 படம்? மீண்டும் டாட்டா காட்டிய சிம்பு
அதனைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் முதன்மை காமெடி நடிகராக நடித்து வந்தார். வடிவேலுவுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் சமீப காலமாக வடிவேலுவை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதைப் பற்றி எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை வடிவேலு.
யார் என்ன வேண்டும் என்றாலும் பேசிக் கொள்ளட்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறா.ர் அவருடன் சேர்ந்து நடித்த துணை நடிகர்கள் வடிவேலுவை பற்றி பல விதங்களில் பல விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் நடிகர் நாசர் வடிவேலுவை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு சீனுக்கு இவ்வளவு வசனமா?!.. ஆள விடுங்க!.. படப்பிடிப்பிலிருந்து மாயமான ரஜினி…
வடிவேலுவுடன் எம்டன் மகன் என்ற படத்தில் சேர்ந்து நடித்த நாசர் வடிவேலுவின் சில நல்ல குணங்களைப் பற்றி மெய்சிலிர்க்க கூறியுள்ளார். அந்தப் படத்தில் வடிவேலுவின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என நாசர் கூறினார்.
அதன் பிறகு இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் நடித்த நாசர் அதில் வடிவேலுவின் குணத்தை பாராட்டி பேசி இருக்கிறார். ஒரு நடிகனுக்கு இருக்க வேண்டிய குணம் வடிவேலுவிடம் இருக்கிறது என கூறிய நாசர் அந்த படத்தின் போது வடிவேலு தனக்கான கதாபாத்திரம் முதலில் என்னை கவர வேண்டும் என்றும் நான் அந்த கேரக்டரை பாராட்ட வேண்டும். அப்படி அமைந்தால்தான் ரசிகர்களும் அதை பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட கேரக்டரை பார்த்து தான் நான் நடிக்கிறேன் என வடிவேலு கூறினாராம். இந்த ஒரு குணம் தான் எல்லா நடிகரிடமும் இருக்க வேண்டும் என நாசர் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணனுக்காக சூப்பர்ஸ்டார் படத்தையே ஸ்டாப் பண்ண அட்லீ!… டைட்டில் தாங்க மாஸ்…
அதாவது மற்றவர்கள் நம் நடிப்பை பாராட்ட வேண்டும் என நினைக்க கூடாதாம். நாமே முதலில் நம் நடிப்பை பார்த்து பிரமிக்க வேண்டுமாம். இந்த ஒரு குணத்தைத்தான் நாசர் அவருடைய மாணவர்களுக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்து வருகிறாராம்.
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…