ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்... எல்லாவற்றிலும் கலக்கிய நாசர்.. மறக்கமுடியாத பாகுபலி..

by sankaran v |   ( Updated:2024-01-21 10:15:14  )
Nassar
X

Nassar

தமிழ்த்திரை உலகில் வில்லனாக பல நடிகர்கள் நடித்து அசத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. சில வில்லன்களைப் படத்தில் பார்க்கும்போதே நமக்கு கோபம் கோபமாக வரும். அதற்கு உதாரணமாக நம்பியாரைச் சொல்லலாம். சில வில்லன் நடிகர்களைப் பார்க்கும் போது படத்திற்காகத் தானே நடிக்கிறார் என்று எந்த ஒரு பதட்டமும் நமக்கு வராது.

ஆனால் படத்தில் நடித்தாலும் அது உண்மையாக இருப்பதைப் போல எந்த ஒரு நடிகர் நடிக்கிறாரோ அவர் தானே திறமைசாலி. அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் நாசர். இவரை உலகநாயகன் கமல் பல படங்களில் நன்கு பயன்படுத்தி இருப்பார். உதாரணமாக தேவர்மகன், குருதிப்புனல், மகளிர் மட்டும் படங்களைப் பார்த்தால் இது நமக்கு நன்கு தெரியும். மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, விஸ்வரூபம் என கமலின் பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.

Nassar

Nassar

பிரியங்கா படத்தில் நாசர் வக்கீலாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நீதிமன்றக் காட்சி தான் மிக மிக முக்கியமான சீன். அப்போது ரேவதிக்கு எதிராக இவர் பேசும் வில்லத்தனமான கருத்துகள் எப்பேர்ப்பட்ட ரசிகர்களுக்கும் கோபத்தை வரவழைத்து விடும்.

அதே போல தெய்வ திருமகள் படத்தில் விக்ரமுக்கு எதிராக வாதாடுவார். இந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போல வில்லன் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவார் நாசர். பாகுபலி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக நிலைத்து நிற்கும்.

பிங்கலதேவனாக வரும் இந்தக் கேரக்டரை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்து இருக்க முடியாது. அதே போல தேவர் மகன் படத்தில் கமலுக்கு வில்லனாக மாயத்தேவராக வரும் நாசரை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவதாரம் படத்தில் ஹீரோவாகவும் வந்து அசத்தியிருப்பார் நாசர். பாகுபலி படத்தில் வில்லனாக அசத்தலான நடிப்பை கொடுத்திருப்பார்.

Next Story