Connect with us

உலகத்துல எல்லாருமே அழகான மனிதர்கள் தான்….! நட்டி என்ற நடராஜின் தத்துவத்தைப் பாருங்க.

Cinema History

உலகத்துல எல்லாருமே அழகான மனிதர்கள் தான்….! நட்டி என்ற நடராஜின் தத்துவத்தைப் பாருங்க.

ஒளிப்பதிவாளர், நடிகர், வில்லன், குணச்சித்திரம் என்ற பன்முகத்திறன் கொண்ட இவர் தனது மிளகா என்ற முதல் படத்திலேயே செம மாஸ் ஹீரோவாகி விட்டார். அவர் தான் நட்டி என்கிற நடராஜ். இவருடைய படங்கள் அனைத்திலும் இவரது நடிப்பு செம மாஸாக இருக்கும்.

சதுரங்க வேட்டை படம் ஒன்று போதும் இவரது பெருமை அத்தனையையும் சொல்ல. இனி இவரது ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் சினிமாவுக்கு பின்னால் இவரது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாமா…அதை அவரே எப்படி சொல்கிறார் என பாருங்கள்.

Actor Natty

வழக்கம்போல காலைல எந்திரிச்சி பார்க்குக்குப் பின்னால ஓடறது…ஏன்னா நம்ம உடம்ப பிட்டா வச்சிக்கணும். அப்புறம் படங்கள் பார்க்குறது… என்னென்ன படங்கள் ரிலீஸாகுதோ அதைத் தியேட்டர்ல போயி பார்த்துருவேன். பல லாங்குவேஜ் படங்கள் ரிலீஸாகும்.

அதெல்லாம் கஷ்டப்பட்டு டிவிடி தேடி வாங்கிப் பார்த்துருவேன். அதுக்குப் பிறகு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சூட்டிங் ஸ்பாட்ல கேப் இருக்கும்போது கிரிக்கெட் ஆடுவோம். மத்தப்படி சூட் இல்லேன்னா பழைய டீம் செட் ஆகும். எங்கேயாவது போய் கிரிக்கெட் ஆடுவோம்.

கேங் இன்னும் மெயின்டைன் பண்றோம். அந்த டீம் செட்டாகும். அப்படி இல்லைனா வழக்கம்போல இளையராஜா பாடல்கள். நைட் 8 மணிக்கு தனியா உட்கார்ந்து கேட்பேன். எப்படி எல்லாம் பண்ணியிருக்காங்க.

எப்படி எல்லாம் பண்ணாங்க. பழைய படங்கள்ல என்னென்ன அப்ரோச் பண்ணியிருப்பாங்க. ஏன் இந்த சிட்டியுவேஷன இப்படி பண்ணிருக்காங்க…அதெல்லாம் அனலைஸ் பண்ணிப் பார்ப்போம். இல்ல…புது ஸ்கிரிப்ட் எதாவது வரும். அதை டிஸ்கஸ் பண்ணுவோம்.

கேமரா மேன் ஆகணும்கற ஐடியாலாம் இல்ல. நான் டுவெல்த் வரைக்கும் தான் படிச்சேன்.

நாங்க பண்ணும்போது இப்ப இந்த மீடியா அவ்ளோ ஓபன் ஆயிருக்குல்ல. அப்ப இதெல்லாம் கிடையவே கிடையாது. ரெண்டு டிபார்ட்மெண்ட் தான் உண்டு என்டர்டெய்ன்மெண்டுன்னா…சினிமா மட்டும் தான். அதை விட்டா ஸ்போர்ட்ஸ் தான் இன்னொரு என்டர்டெய்ன்மென்ட். அப்ப வந்து… என்ன சொல்றது…?!

Actor natty2

எதாவது பண்ணனும்னு தோணுச்சி…கரெக்டா ஜாப் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க அப்பா சொன்னாரு. டேய் தயவு செய்து படிப்பைக் கண்டினியு பண்ணு. இங்கிட்டும் அங்கிட்டும் சுத்திக்கிட்டு இருக்காத. நல்லால. நம்ம எப்பவும் பேக் பெஞ்ச் தானங்க. படிப்புல நம்ம பிரமாதமா இருந்தா மத்ததைப் பத்திக் கான்சன்ட்ரேட் பண்ணியிருக்க வேண்டியதில்ல. அது ஒரு தனி லைஃப்.

எங்க பாதர் சொன்னாரு. ஏன் நீ படிக்க மாட்டேங்குற…இல்ல இந்த மாதிரி வேற எதாவது பண்ணலாம்னு ட்ரை பண்றேன்…சரி உனக்காக 1 இயர் டைம் கொடுக்குறேன். நீ பண்ணு. ஏன் இப்போ அந்த டைம் கொடுக்குறேன்னா இது சின்ன வயசு. ஒரு வருஷம் வேஸ்ட் ஆனாலும் பரவாயில்ல. சரி போடா…பண்றத பண்ணிக்கோ. அப்படியே பர்தரா எதாவது படின்னாரு. நான் அப்ளைலாம் பண்ணேன். அதுக்கப்புறம் எங்கே அதைப் போய் தொடறது?!

காதல்…அதெல்லாம் வராம இருக்குமா? வந்துருக்கு…ஆனா அதைப் பெரிசா…நம்ம எதாவது பொசிஷன ஸ்ட்ராங் பண்றதுக்கே போராடுறோம். அது…அதெல்லாம் கான்சன்ட்ரேட் பண்ணா லைப் வேலைக்கு ஆகாது.

நம்மளை எல்லாம் ப்ரபோஸ் பண்ணிருக்காங்க. நம்ம யாரையும் பெரிசா ப்ரபோஸ் பண்ணது கிடையாது. புடிக்கும்…அதனால யாரையாவது நினைச்சிக்குவோம். ஒரு பொசிஷனுக்கு வராம வந்து…உலகத்துல ஒரு விஷயம் முக்கியமா இருக்கணும்.

Actor Natty

பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அந்தப் பெண்கள் நோ சொல்ற அளவுக்கு நாம வளர்ந்துக்கக் கூடாது. எஸ் சொல்ற அளவுக்கு நாம வளர்ந்துக்கணும். அது எங்க வரும்?

அன்வாண்டட் திங்க்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டு நம்மோட புரொபஷனல்லயும் நம்மோட ஸ்டடீஸ்லயும் நம்ம கான்சன்ட்ரேட் பண்ணா தாராளமா அந்த எஸ் கிடைக்கும். ஐயய்யோ அவரை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரு பொண்ண நினைக்க வைக்கணும். எப்பவுமே உங்க அப்பா சந்தோஷமா இருந்தாங்கன்னா அது உங்க அம்மாவால தான் இருக்க முடியும். உங்க தாத்தா சந்தோஷமா இருந்தாங்கன்னா அது உங்க பாட்டியாலத் தான் முடியும்.

சோ அப்பா அம்மா சந்தோஷமா இருந்ததால தான் நம்ம பொறந்திருக்கோம். நம்ம சந்தோஷமா இருக்கணும்னா நம்மைத் தேடி வர்ற பொண்ண சந்தோஷமா வச்சிக்கணும். உலகத்துல அசிங்கமான மனிதர்கள்னு யாருமே கிடையாது. எல்லாருமே அழகான மனிதர்கள். அந்த மனசோட நாம பார்த்தா எல்லாமே அழகா தெரியும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top