நெப்போலியன் தனது மகன் தனுஷ் திருமணம் குறித்தும் முதல் முறையாக பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
நடிகர் நெப்போலியன்: தமிழ் சினிமாவில் 80’s மற்றும் 90’s காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். ஹீரோவாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி அதிலும் சாதித்து காட்டியவர்.
மூத்த மகன் தனுஷ்: நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தனுஷ் மற்றும் குணால் இன்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு மருத்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பதவியை தியாகம் செய்துவிட்டு அமெரிக்கா சென்று செட்டிலானார் நெப்போலியன்.
இதையும் படிங்க: Salaar 2: அடேங்கப்பா!… கொரியன் நடிகருடன் இணையும் பிரபாஸ்… முரட்டு சம்பவமாக இருக்கும் போலயே!…
ஜப்பானில் திருமணம்: சமூக வலைதள பக்கங்களில் எங்கு திரும்பினாலும் நெப்போலியன் மகன் தனுஷ் குறித்த திருமண பதிவுகள் தான் அதிகம் வலம் வருகின்றன. பலரும் வியக்கும் அளவிற்கு தனது மகன் தனுஷுக்கு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்து இருக்கின்றார். நடிகர் நெப்போலியன் ஜப்பான் டோக்கியோவில் இந்த திருமணம் இந்து முறைப்படி சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடைபெற்று முடிந்தது.
நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும், தனுஷுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் இருந்து ஏராளமான சினிமா பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகை மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், சுகாசினி, பாண்டியராஜன் கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். தனது மகனின் விருப்பத்திற்காக டோக்கியோவில் திருமணத்தை நடத்தி இருக்கின்றார் நடிகர் நெப்போலியன்.
திருமண செலவு: திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பிரம்மிக்கும் வகையில் அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தார் நடிகர் நெப்போலியன். ஹல்தி, சங்கீத், மெஹந்தி என அடுத்தடுத்த கொண்டாட்டங்களுடன் திருமணமும் மிக விமர்சியாக நடைபெற்றது. திருமணத்தில் செட்டிநாடு சமையல் தொடங்கி தென்னிந்திய சமையல் வரை அனைத்தையும் பரிமாறி அசத்தினார் நெப்போலியன்.
ஜப்பானில் இருப்பவர்களே பார்த்து வியக்கும் அளவிற்கு இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக நடிகர் நெப்போலியன் நான்கு மடங்கு செலவு செய்திருப்பதாக கூறியிருந்தார். இந்தியாவை விட அமெரிக்காவில் திருமணத்தை நடத்துவதற்கு அதிக செலவாகும்.
அதிலும் அமெரிக்காவைக் காட்டிலும் ஜப்பானில் திருமணம் செய்வதற்கு மேலும் நான்கு மடங்கு செலவானதாக கூறியிருக்கின்றார். இதையெல்லாம் தனது மகனின் விருப்பத்திற்காக செய்ததாகவும் கூறியிருந்தார். செலவு என்பது முக்கியமில்லை என் மகனுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறியிருக்கின்றார்.
நெப்போலியன் மருமகள்: திருமணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போது நாங்கள் அக்ஷயாவிடம் தெளிவாக கேட்டு விட்டோம். யாருடைய வற்புறுத்தலின் பெயரில் நீ திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாயா? என்று கேட்டதற்கு இல்லை எனக்கு பிடித்து தான் இந்த திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவித்து இருக்கின்றேன்.
யாரும் என்னை வற்புறுத்தவில்லை என்று கூறியிருந்தார். மேலும் அக்ஷயா மிகவும் தன்மையாக பழகக் கூடியவர். சத்தமாக கூட பேச மாட்டார். இப்படிப்பட்ட ஒரு பெண் எங்களுக்கு மருமகளாக அமைந்தது நாங்கள் செய்த பாக்கியம் என்று அந்த பேட்டியில் நெப்போலியனும் அவரது மனைவி சுதாவும் கூறி இருந்தார்கள்.
Biggbboss Tamil:…
VijayTV: விஜய்…
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…