கமலை பார்த்து கமல் எங்கே? என்று கேட்ட நடிகர்… பங்கமாய் கலாய்த்த உலகநாயகன்.... தரமான சம்பவம்…

அடையாளமே தெரியாத வகையில் பல பல தோற்றங்களில் நடிக்கக்கூடியவர் கமல்ஹாசன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். “அவ்வை சண்முகி”, “தசாவதாரம்”, என பல திரைப்படங்களை நாம் உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் தனது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஒரு சக நடிகரே அடையாளம் தெரியாமல் கமலிடம் வந்து கமல் எங்கே? என்று கேட்டிருக்கிறார். இப்படியும் ஒரு நகைச்சுவையான சம்பவம் நடந்திருக்கிறது.

Indian

Indian

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “இந்தியன்”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் முக்கிய வெற்றித் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

இதில் கமல்ஹாசன் சந்துரு, சேனாதிபதி என்ற அப்பா-மகன் கதாப்பாத்திரங்களில் இரு வேடங்களில் நடித்திருந்தார். சேனாதிபதி என்ற கதாப்பாத்திரத்தை நம்மால் மறந்திருக்க முடியாது. வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார். சந்துரு என்ற இளவயது கதாப்பாத்திரத்திற்கும் சேனாதிபதி என்ற முதிய கதாப்பாத்திரத்திற்கும் இடையே தனது சிறப்பான நடிப்பால் நிறைய வேறுபாடுகளை காட்டியிருப்பார் கமல்ஹாசன்.

Indian

Indian

இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் நடிகர் நிழல்கள் ரவி அப்படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். அப்போது கமல்ஹாசன் சேனாதிபதி கெட் அப்பில் இருந்துள்ளார். அவரிடமே சென்று கமல் எங்கே இருக்கிறார்? என கேட்டாராம் நிகழ்கள் ரவி. அதற்கு கமல்ஹாசன் “தெரியல, உள்ளதான் எங்கயாவது இருப்பார்” என கூறினாராம்.

Nizhalgal Ravi

Nizhalgal Ravi

அதன் பின் கமலுடன் இணைந்து ஒரு காட்சியில் நடிக்கும்போதுதான் தெரிந்திருக்கிறது அந்த முதியவர்தான் கமல்ஹாசன் என்று. படப்பிடிப்பு முடிந்தவுடன் நிழல்கள் ரவி கமல்ஹாசனை பார்த்து “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே” என கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் படக்குழுவே விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it