Connect with us
sivaji

Cinema History

கர்ணனுக்கு சிவாஜி என்றால் ராமருக்கு இவர்தான்! இன்றுவரை எல்லா வீடுகளிலும் தெய்வமாக பூஜிக்கப்படும் நடிகர்

Actor NT Ramarao: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் பல புராண கதாபாத்திரங்கள், வரலாற்றுத் தலைவர்கள், சரித்திர கதாபாத்திரங்கள் என இவற்றையெல்லாம் நாம் சிவாஜியின் உருவத்தில் தான் பார்த்து  மகிழ்ந்திருக்கிறோம். வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் இதுவரை நேரில் பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால் இருந்தால் இப்படித்தான் இருப்பார் போல என்ற ஒரு வரையறையை தந்தவர் சிவாஜி. அப்படியே கண்முன் காட்சியளித்தார். அதே போல் சிவபெருமானாக திருவிளையாடல் படம், கர்ணனாக கர்ணன் திரைப்படம், அப்பர் என பல கதாபாத்திரங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தவர் சிவாஜி.

இதையும் படிங்க: ஹிட்டடித்த ஐ நோ டயலாக்…! ஓவர் இம்சை செய்த ரகுவரன்… காண்டாகிய கே.எஸ்.ரவிக்குமார்… சூப்பர் பின்னணி!

இப்படி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் சிவாஜி என்றால் ஆந்திரா மக்களுக்கு பொக்கிஷமாக வாழ்ந்தவர் என்.டி.ராமராவ். இவர் பெரும்பாலும் கிருஷ்ணர், ராமர் வேடங்களில் நடித்து இன்று பெரும்பாலான ஆந்திர மக்கள் தங்கள் வீடுகளில் இவர் படத்தை பூஜித்து வருகின்றார்களாம்.

ntr

ntr

இந்த நிலையில் என்.டி.ராமராவிடம் ஒரு நிரூபர்  ‘இப்படி புராண கதைகளில் நடிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்காதா?’ என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.அதற்கு என்.டி.ராமராவ் ‘ புராண கதைகளை ஏற்கும் போது நான் நடிக்கவே மாட்டேன் என்பதுதான் உண்மை. மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஆடவேண்டும், ஓட வேண்டும், சண்டையிட வேண்டும்.

இதையும் படிங்க: அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!

ஆனால் புராண கதைகளை ஏற்கும் போது நான் ராமனாகவோ கிருஷ்ணனாகவோ நடிக்கவே மாட்டேன். வசனங்களை கூட அமைதியாகவோ நிதானமாகவோதான் பேசுவேன். அதே மாதிரி ஒருவரை பார்த்து வசனத்தை பேசும் போது எதிரே இருக்கும் நபரை பார்க்கவே மாட்டேன்.

அவருக்கு பின்னால் ஒரு பிம்பம் இருப்பதை போல் உணர்ந்து அந்த சூன்யத்தை பார்த்துதான் பேசுவேன்.’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து என்.டி.ராமராவ் சினிமாவிற்காக எப்படி தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: கோழி சுமாரா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்!.. வாரிசு நடிகையை திருமணம் செய்ய இப்படியொரு காரணமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top