அல்லோல்படும் பி.யு.சின்னப்பாவின் குடும்பம்! யாருமே எதிர்பார்க்கல - இப்படி ஒரு உதவியை செய்த ரஜினி
தமிழ் சினிமாவில் 30, 40களில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் பி.யு.சின்னப்பா. சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார். முதன் முதலில் சிறுவனாக இருந்த போது திருடனாக நடித்து அவர் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அதன் காரணமாகத்தான் அவர் நாடகங்களில் நடிக்க முடிந்தது. நடிகர் மட்டுமில்லாது சிறந்த பாடகரும் கூட.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கம்பெனியில் முதன் முதலில் தன்னை இணைத்துக் கொண்டார் சின்னப்பா.எம்ஜிஆருக்கு முன்னாடி இவர்தான் பெரும் புகழை பெற்ற நடிகராக திகழ்ந்தார். இத்தனை பெருமை மிக்க சின்னப்பாவின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? அதை ஒரு பேட்டியில் பிரபல நடிகரும் இயக்குனருமான கலைஞானம் விவரமாக கூறியிருந்தார்.
ஒரு சமயம் கலைஞானம் ஒரு படத்தில் துணை நடிகராக நடிக்க மைசூர் சென்றிருந்தாராம். அதே படத்தில் ஒரு அம்மா வேடத்திற்காக சின்னப்பாவின் மனைவி சகுந்தலாவும் அவரது ஒரு மகனும் அங்கு வந்திருந்தார்களாம். சின்னப்பா மறைவிற்கு பிறகு 5 வருடங்கள் கழித்து அவரது மனைவி நடித்த படமாம் அது. அப்போது சகுந்தலாவிடம் கலைஞானம் சின்னப்பாவின் மலரும் நினைவுகளை பகிர்ந்து சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என சொன்னாராம்.
நீண்ட வருடங்கள் கழித்து கலைஞானம் தயாரிப்பாளரான பிறகு ஒருவர் கலைஞானத்தை தேடி வீட்டிற்கு வந்தாராம். அவர்தான் சின்னப்பாவின் மகன் புகழேந்தியாம். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு புகழேந்தி கலைஞானத்திடம் ‘தனக்கு எதாவது நடிக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்டாராம். அதை கேட்டதும் கலைஞானத்திற்கு ஒரே ஷாக். சின்னப்பாவின் மகனா இப்படி கேட்பது? என்று அதிர்ச்சியாகிவிட்டதாம்.
உடனே கலைஞானம் கண்டிப்பாக தருகிறேன் என்று சொல்லிவிட்டு அனுப்பினாராம். அதன் பிறகு புகழேந்தியின் மகன் ஒரு நாள் வந்த கலைஞானத்திடம் நான்தான் சின்னப்பாவின் பேரன் என்றும் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது என்றும் சொன்னாராம். அதாவது சின்னப்பா மறைவிற்கு பிறகு அவரது மனைவி சகுந்தலா இருந்த சொத்துக்களை எல்லாம் அவரது உறவினர்கள் பறித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில் கிடைத்த விலைக்கு விற்றுவிற்றாராம்.
அதனால் பெரும் நஷ்டமடைந்தார்களாம். உதாரணமாக 10000 மதிப்புள்ள ஒரு வீட்டை 2000க்கு கொடுக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போது எந்த ஒரு சொத்தும் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழி இல்லாமலும் இருப்பதாக அவரது பேரன் கூறியிருக்கிறார். அதற்கு கலைஞானம் ‘ நான் வேண்டுமென்றால் ரஜினியிடம் எதாவது உதவி கேட்கட்டுமா?’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த பேரன் ‘ நாங்கள் இங்கு வந்ததுமே நிலைமையை அறிந்த ரஜினி 2 லட்சம் கொடுத்தார்’ என்று சொல்லியிருக்கிறார். இதை கேட்டதும் கலைஞானம் மிகவும் பெருமைப்பட்டாராம். ஏனெனில் ஒரு காலத்தில் கலைஞானமே வீடு இல்லாமல் தவித்த போது ரஜினிதான் வீடு வாங்கி கொடுத்தார்.இப்படி யாரும் எதிர்பாராத நேரத்தில் உதவி செய்வதே ரஜினியின் வேலை என்றும் கலைஞானம் கூறினார்.இருந்தாலும் சின்னப்பாவின் குடும்பத்திற்கு கண்டிப்பாக திரையுலகை சார்ந்த அனைவரும் உதவி செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோளையும் விடுத்தார் கலைஞானம்.