பாலசந்தருக்கு ரஜினி கமல் செய்யாததை நான் செஞ்சிருக்கேன்! வாழ்நாள் பாக்கியமாக கருதிய நடிகர்

Published on: February 21, 2024
gopi
---Advertisement---

Director Balachander: நாடக மேடையில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 70, 80களில் தமிழ் சினிமாவை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். 1965 ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பாலசந்தர்.

இந்தப் படத்தில் நாகேஷ் ஹீரோவாக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் மனித உறவுகளுக்கிடையே இருக்கும் சிக்கல்கள் மற்றும் சமூகம் சார்த்த பிரச்சினைகளை உள்ளடக்கிய படங்களைத்தான் பெரும்பாலும் பாலசந்தர் எடுப்பார்.

இதையும் படிங்க: அட இந்த சைக்கோ கதையை முடிச்சிவிடுங்கப்பா… ஒரு ஆளு அதை கூட அமிர்தாவால சமாளிக்க முடியலையா?..

அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் பாலசந்தர் இயக்கிய படங்களில் மிகச்சிறந்த படைப்புகளாகும். இன்று பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி , கமலை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பாலசந்தரையே சேரும்,

அதற்கு எப்போதும் நன்றிக்கடன் உள்ளவர்களாக எப்போதும் எந்த மேடை ஏறினாலும் ரஜினி ஆகடும் கமல் ஆகட்டும் பாலசந்தரை பற்றி பேசாமல் கீழே இறங்க மாட்டார்கள். அந்தளவுக்கு அவரை கடவுளாக குருவாகவே இன்று வரை நினைத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: பாரதி கண்ணம்மா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர்தான்!.. பல வருடங்கள் கழித்து சேரன் சொன்ன தகவல்..

இந்த நிலையில் பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான படவா கோபி பாலசந்தரை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். படவா கோபியையும் சினிமாவில் அறிமுகம் செய்து வந்த பெருமை பாலசந்தருக்கே உரியது. பொய் என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் படவா கோபி நடித்திருப்பார்.

அந்தப் படத்தில் பாலசந்தர் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அந்தப் படத்திற்காக பாலசந்தருக்கு டப்பிங் பேசியதே படவா கோபிதானாம். இதை குறிப்பிட்டு சொன்ன படவா கோபி பாலசந்தருக்காக கமல் ரஜினி கூட செய்யாததை நான் செய்திருக்கிறேன் என இந்த டப்பிங் பேசியதை கூறினார்.

இதையும் படிங்க: ஜெமினி கணேசன் வந்தாதான் நான் நடிப்பேன்!.. படப்பிடிப்பில் அடம்பிடித்த சாவித்ரி!.. இப்படி ஒரு லவ்வா!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.