ஐய்யயோ இவர் ஹீரோவா? பின்னாளில் 80 படம் 40 ஹீரோயின்களுடன் நடித்த அந்த ஹீரோ

manvasanai
1983 ஆம் ஆண்டு மண்வாசனை படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் பாண்டியன். இவர் எப்படி இந்தப் படத்தில் ஹீரோவாக செலக்ட் ஆனார் என்பதை பற்றி அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படம்தான் மண்வாசனை.
இந்தப் படத்திற்கான அட்வான்ஸை கிழக்கே போகும் ரயில் படம் ஆரம்பிக்கப்படும் போதே சித்ரா லட்சுமணன் பாரதிராஜாவிடம் கொடுத்துவிட்டாராம். அதன் பிறகு அடுத்தடுத்த சில்வர் ஜூப்ளி படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியாக அந்த நேரத்திலேயே மண்வாசனை படத்தை ஆரம்பித்திருந்தால் நானும் இந்நேரம் நன்றாக இருந்திருப்பேன். ஆனால் அதை விட்டு காதல் ஓவியம், வாலிபமே வா வா என அடுத்தடுத்த ப்ளாப்புக்கு பிறகு மண்வாசனை படத்தை தொடங்கினார் பாரதிராஜா. இதுவே எனக்குள் ஒரு பீதியை கிளப்பியது என சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: Pushpa 2: பைட்னா எம்ஜிஆர் படத்தையே அப்படி பார்த்தவன்… ஆனா புஷ்பா 2க்கு நோ சான்ஸ்… அசந்து போன பிரபலம்
ஹீரோ இல்லாமல் சூட்டிங்கா? : மண்வாசனை படத்தில் முதலில் ஹீரோவையே செலக்ட் செய்யவில்லை. 80 பேருடன் அவுட்டோர் சூட்டிங்கிற்கு ஹீரோ இல்லாமல் கிளம்பியாச்சு. இதுதான் உலக அளவில் முதல் முறை. அதாவது ஒரு ஹீரோ இல்லாமல் சூட்டிங் போனது இந்தப் படத்திற்குத்தான். எந்த தைரியத்தில் பாரதிராஜா அப்படி வந்தார் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு இதுதான் முதல் தயாரிப்பு படம். அதனால் மனதுக்குள் கொஞ்சம் குழப்பம் இருக்கத்தான் செய்தது என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.
பல கல்லூரி மாணவர்களை பார்த்தும் திருப்தியில்லை. சரி. கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு வரலாம் என போனோம். வெளியே வரும் போது இயக்குனரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒருவன் எகிறி எகிறி குதித்து பார்க்க முயற்சி செய்தான். பாரதிராஜா அவனை பார்த்துவிட்டு ‘சித்ரா அவனை தூக்கி காருக்குள் போடு’ என சொன்னார். சரி அவருக்கு தெரிஞ்சவரா இருக்கும் போல என நானும் நினைத்து அந்த பையனை காருக்குள் ஏற்றி விட்டோம்.

pandian
சித்ரா லட்சுமணனின் பயம்: கொஞ்சம் தூரம் போனதும் ‘சித்ரா இவன் தான் நம்ம பட ஹீரோ’ என சொன்னதும் எனக்கு குபீர் என ஆகிவிட்டது. என்னடா நமக்கு வந்த சோதனை? முதல் படம். இப்படி முகம் தெரியாத நபரை வச்சு ஹீரோவா போடனும்னு சொல்றாரேனு பயந்துகிட்டே இருந்தேன். அப்போது என் படத்திற்கு வசனம் கலைமணி. நானும் கலைமணியும் நெருங்கிய நண்பர்கள். கலைமணி சொன்னால் இயக்குனர் எதையும் கேட்பார். அதனால் கலைமணியிடம் இந்த பையனை காண்பித்து ‘ நீதான் இயக்குனரிடம் இந்தப் பையன் ஹீரோவா செட்டாகாதுனு சொல்லனும்னு’ சொல்ல சொன்னேன்.
அதற்கு முன்பே கலைமணிக்கும் அப்படி ஒரு எண்ணம் தான் இருந்தது. அந்த பையனை பார்த்ததும் ‘இயக்குனருக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சானுதான் கேட்டான்.’ சரினு ரூமுக்கு போனோம்.கலைமணியை பார்த்ததும் இயக்குனர் ‘என்ன கலைமணி? எப்படி இருக்கிறான் நம்ம ஹீரோ’ என கேட்டதும் ‘சூப்பர்’ என கலைமணி சொல்ல எனக்கு ஆத்திரம் தாங்கல. பின் கலைமணியை தனியாக அழைத்து ‘என் வாழ்க்கைல விளையாடுற.. ஆனா நல்லா இருப்ப’என சொன்னேன்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படம் குறித்து கேள்வி.. பிரஸ் மீட்டில் திடீரென்று கோபப்பட்ட சித்தார்த்!…
பாரதிராஜாவின் கால்குலேஷன்: அதற்கு கலைமணி ‘இயக்குனர் என்ன கேட்டார்? எப்படி நம்ம ஹீரோனு கேட்டார். அப்போ என்ன அர்த்தம். அவர் உறுதியாக இருக்கிறார் என்றுதான் அர்த்தம். அதான் நான் சூப்பர்னு சொன்னேன்’ என கூற சரி வாய்ச்சது அவ்ளோதானு படத்தை ஆரம்பிச்சோம். அந்தப் பையன் தான் நடிகர் பாண்டியன். பின் படம் வெளியாகி இயக்குனரின் கால்குலேஷன் சரியானதுதான் என மண்வாசனை படம் நிருபிச்சது.அதன் பிறகு நடிகர் பாண்டியன் 80 படம் 40 ஹீரோயின்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகராக சினிமாவில் வலம் வந்தார் என சித்ரா லட்சுமணன் கூறினார்.