பீர் குடிப்பதை போல் சிறுநீரைக் குடிக்கும் சூர்யா பட நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல்

suriya (1)
Suriya: பீர் குடிப்பதை போல பிரபல வில்லன் நடிகர் தினமும் தன்னுடைய சிறுநீரை குடித்து தன்னுடைய வலியை போக்கி இருக்கும் செய்திதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதுவும் சூர்யா படத்தில் நடித்த வில்லன் நடிகர் எனும்போது இன்னும் அந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது. சூர்யாவின் கேரியரில் மிக முக்கிய படமாக கருதப்படுவது சூரரைப் போற்று. சுதா கொங்கரா சூர்யா ஆகியோர் காம்போவில் முதன்முதலில் வெளியான திரைப்படம் தான் சூரரைப் போற்று.
இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது .தியேட்டரில் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லையே என இப்போது வரை ரசிகர்கள் வருத்தப்பட்டு பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த படம் ஒரு நல்ல கதைகள பின்னணியில் அமைந்த படமாக கருதப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். இவர்களுடன் இணைந்து மோகன் பாபு ,கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியம், பரேஷ் ரவால், ராதிகா மதன் ஆகியோர் நடித்திருப்பார்.
இதில் பரேஸ் ரவால் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பார் .படத்தில் சூர்யாவுக்கு கிடைக்க வேண்டிய அந்த டெண்டரை கிடைக்க விடாமல் செய்வதே இந்த பரேஷ் ரவால்தான். இவர்தான் பீர் குடிப்பது போல தன்னுடைய சிறுநீரகத்தை குடித்திருக்கிறார். அதற்கான பின்னணி விவரங்களை பயில்வான் ரங்கநாதன் அவருடைய யூடியூப் சேனலில் தெளிவாக கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பரேஷ் ரவால் தன்னுடைய காலில் பெரிய அடி காரணமாக மிகவும் அவதியுற்று வந்தாராம். அதனால் அந்த கால் மிகவும் வீங்கி நடக்க முடியாமல் இருந்தாராம். அந்த நேரத்தில் அவரைப் பார்க்க அஜய் தேவ்கான் வந்திருக்கிறார். பரேஷ் ரவாலை பார்த்ததும் நான் ஒரு மருந்து சொல்கிறேன். விலையில்லா மருந்து. ஆனால் அதை நீ சாப்பிடும் வேளையில் சிகரெட் மாமிசம் என எதையும் சாப்பிடக்கூடாது என சொல்லி அவர்தான் இந்த ஐடியாவை கொடுத்தாராம்.
ஒரு 15 நாளுக்கு பீர் குடிப்பதை போல காலையில் எழுந்ததும் உன்னுடைய சிறுநீரை பிடித்து நீ குடி .இதற்கு அதுதான் மருந்து என கூறினாராம் அஜய் தேவ்கான். பரேஷ் ரவாலும் அதே மாதிரி செய்ய சொன்னதைப் போல இரண்டு வாரங்களில் அவருடைய அந்த கால் வலி வீக்கம் எல்லாம் சரியாகி விட்டதாம். இதைப்பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது சிறுநீரகத்தில் வலி நிவாரணி நிறையவே இருக்கின்றது.
உப்புக்கள் அதிகம் இருக்கின்றன .அதனால் இது வொர்க் அவுட் ஆகியிருக்கிறது பரேஷ் ரவாலுக்கு முன்பே முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், இவரும் அவருடைய சிறுநீரகத்தை குடித்தவர் தான். இளமையின் ரகசியத்திற்கான காரணமே இதுதான் என மொரார்ஜி தேசாய் முந்தைய பேட்டியில் கூறி இருக்கிறாராம். இந்த செய்தி அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக மாறியது என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.