வயசுக்கும் ஆசைக்கும் தொடர்பு இல்லைங்க!.. கல்யாணம் பண்ணிக்கப் போகும் பார்த்திபன்!..
தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைகளத்தோடு தன் லட்சியத்தை அடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நடிகர் பார்த்திபன். இவரின் சமீபத்திய் படங்கள் புதுவித முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்களாகவே அமைந்தன. இரவின் நிழல் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய் படமாக இருந்தன.
ஆனால் மக்களை திருப்திப் படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் தன் அடுத்தக்கட்ட முயற்சிக்கு முன்னேறி கொண்டுதான் இருக்கிறார் பார்த்திபன். இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஆனாலும் இவர்கள் திருமண வாழ்க்கை பல வித பிரச்சினைகளால் விவாகரத்தில் முடிந்தது.
இதையும் படிங்க : என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன ஒரு வார்த்தை!.. கடைசிவரை பின்பற்றிய எம்.ஜி.ஆர்…
இவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். குழந்தைகளுக்காகவே பார்த்திபன் மறுமணம் செய்யாமல் இருந்தார். குழந்தைகள் நலன் கருதியே அடுத்து ஒரு திருமணத்தை பற்றி யோசிக்காமல் இருந்தார். ஆனால் இப்போது தன் திருமணத்தை பற்றி முதன் முதலில் வாய்திறந்திருக்கிறார்.
இரண்டாவது திருமணத்தை பற்றி சித்ரா லட்சுமணன் பார்த்திபனிடம் கேட்டபோது ‘என் இரு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு முடிஞ்சதுக்கு அப்புறம் நான் திருமணம் செய்யப்போகிறேன். இல்லை எனக்கு முதலில் வாய்ப்பு வந்தாலும் எனக்கு அடுத்ததாக மகனுக்கு நடக்கலாம்’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது திருமணம் என்று சொல்லாமல் வாழ்க்கையில் ஒரு துணை எப்போதும் வேண்டும். அதற்கு வயது வித்தியாசம் என்றெல்லாம் வரைமுறை இல்லை. அதனால் எனக்கு நடப்பது திருமணமாக இருப்பது, ஒரு துணையாக இருக்கும் என்று கூறிவிட்டு அதே பேட்டியில் அவரது ராசி, நட்சத்திரம் எல்லாம் கூறி எதாவது பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன்.