Connect with us
parthiban

Cinema News

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி!.. அந்த நடிகரால ‘வடை போச்சே’ மொமெண்ட்டில் பார்த்திபன்…

Actor parthiban: பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர்களில் பார்த்திபனும் ஒருவர். பாக்கியராஜின் இயக்கங்களில் வெளியான சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் வருவார். தாவணி கனவுகள் படத்தில் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருந்தார். புதிய பாதை படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக மாறினார்.

முதல் படமே தேசிய விருதை பெற்று தந்தது. அதன்பின் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநீ, ஹவுஸ்புல், இவன், வித்தகன் உள்ளிட்ட சில படங்களை இயக்கி நடித்தார். இதில், உள்ளே வெளியே படம் மட்டுமே அவருக்கு வெற்றியை கொடுத்தது.

இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?!. முட்டா கூ….ளா?!.. வெடித்த மன்சூர் அலிகான்!..

ஒருபக்கம், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் ஹீரோவாக நடிக்க துவங்கினார். பார்த்திபன் என்றால் நக்கல், நையாண்டிதான். அதேபோல், எதையும் வித்தியாசமாக யோசிப்பவர். சினிமா விழாக்களில் பேசினாலும் பார்த்திபன் பேசுவது கவனிக்கப்படும். என்ன பேசலாம் என்பதையும் ஒருவருக்கு பரிசு கொடுத்தால் என்ன கொடுக்கலாம் என்பதையும் ஒரு நாள் ரூம் போட்டு யோசிப்பவர் இவர்.

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு நடிகர் நடிப்பது என்பது எப்போதுமே இருக்கும். கலைப்புலி தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கிய திரைப்படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தில் மம்முட்டி நடிக்க வேண்டிய வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது பார்த்திபன்தான்.

இதையும் படிங்க: ரஜினி பேசலாம்.. மன்சூர் அலிகான் பேசக்கூடாதா?!.. திரிஷா விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை..

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய கலைப்புலி தாணு ‘பார்த்திபன் நடிக்கிறார் என ராஜீவ் மேனன் சொன்னதும் யார் தயாரிப்பாளர்? என நான் கேட்டேன். அவர் ஆடிப்போய்விட்டார். எனக்கும் பார்த்திபனுக்கு இடையே ஒரு மனஸ்தாபம் இருந்தது. எனவே, பார்த்திபன் நடிப்பதாக இருந்தால் நீங்கள் வேறு தயாரிப்பாளரை வைத்து இப்படத்தை எடுங்கள்’ என சொல்லிவிட்டேன். எனவே, மம்முட்டியை அப்படத்தில் நடிக்க வைத்தார்’ என தாணு பேசியிருந்தார்.

aishwarya

அந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஐஸ்வர்யா ராயோடு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு பார்த்திபனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதேநேரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக இல்லை என்றாலும் பார்த்திபன் அவருடன் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் பாடததால் எம்.ஜி.ஆர் வேறு மாதிரி நடித்த பாடல்.. அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top