எல்லாத்துலயும் புதுமை!.. நண்பர்களின் திருமணம்னாலே இந்த அன்பளிப்புதான்!.. பார்த்திபனின் ஹைடெக் ஐடியா..
தமிழ் சினிமாவில் புதுமையை விரும்பும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் பார்த்திபன். எதை யோசித்தாலும் அதில் புதுமையை புகுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துபவர். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக வந்தவர். கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பார்த்திபன்.
நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த பார்த்திபன் இயக்குனராக மாறியது ஒரு விபத்துதான். மேலும் தொடக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கி அதன் பின் நடிகராக அந்தஸ்து பெற்றார். பல படங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.
இப்பொழுதும் இவரின் படங்களில் ஏதாவது புதுமையான முறையை புகுத்தி ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க இவரின் பேச்சுக்கு பல எதிர்கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் பார்த்திபனே ‘ நான் என்ன பேசுனாலும் அது விமர்சனமாக மாறிவிடுகிறது’ என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :ஆயிரம் பேர் முன்னாடி இருந்தும் கோவணத்தை கட்டிக்கொண்டு திரிந்த கமல்ஹாசன்… ஆண்டவர்ன்னா சும்மாவா!!
இந்த நிலையில் இவரை பற்றி ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவரின் நண்பர்கள் யாருக்காவது திருமணம் என்றாலே அவர்கள் அனைவருக்கும் இதுவரை ஒரே அன்பளிப்பைத்தான் பரிசளித்திருக்கிறாராம் பார்த்திபன்.
அதுதான் கடிகாரம். அதிலும் சற்று வித்தியாசத்தை விரும்பியிருக்கிறார். அந்த கடிகாரத்தை அவரே உருவாக்குவாராம். மேலும் பட்டு வேட்டியில் ஒரு நுனியும் கூரைப்புடவையில் ஒரு நுனியும் முடிச்சிடப்பட்டிருக்குமாம்.
கூடவே கடிகார முள் போல மகிழ்ச்சி உங்களை தொரத்துட்டும் என்றும் எழுதி தன் கையெழுத்திட்டு கொடுப்பாராம். எல்லாவற்றிலும் புதுமை காணும் பார்த்திபன் கொடுக்கும் அன்பளிப்பிலும் வித்தியாசமான முறையை அணுகியிருக்கிறார்.