சிம்பு என்னை ஏமாத்திட்டாரு... பப்ளிக்கா புலம்பிய நடிகர் பார்த்திபன் - வீடியோ!

parthiban
மாநாடு படம் பார்த்த பார்த்திபன் என்ன சொன்னார் தெரியுமா?
மாஸான ஹிட் படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக கோலிவுட்டில் கொண்டாடப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் மாநாடு.
இப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியாகுமா? வெளியாகாதா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் வெளியாகி இன்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மீண்டும் தொடை கவர்ச்சியில் இறங்கிய யாஷிகா..பசங்க சும்மா இருக்க மாட்டார்களே!!
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மாநாடு படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்கிளில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "என்ன ரொம்ப ஏமாத்திட்டாங்க இந்த படத்தோட டீம். மாநாடுன்னு ஒரு தமிழ் படத்தை பார்க்க வந்தேன். ஆனால், இது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு ஹாலிவுட் படம். சிம்பு, எஸ்ஜே சூர்யா பின்னி உதறிட்டாங்க என கூறி பாராட்டினார்.