More
Categories: latest news

AR Rahman: ‘பிரிவால் புதிய அமைதி பிறக்கும்’.. ஏஆர் ரஹ்மான் விவாகரத்துக்கு பார்த்திபன் போட்ட பதிவு

AR Rahman: தொடர்ந்து சினிமா துறையில் விவாகரத்து பிரச்சினை ரசிகர்களை திகிலடைய செய்கிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து சமயமும் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் இருந்தது. கிட்டத்தட்ட 18 வருட திருமண வாழ்க்கையை எப்படி ஈஸியாக தூக்கி போடுகிறார்கள்? அதுவும் காதல் திருமணம். தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருக்கும் போது எப்படி இப்படியெல்லாம் முடிவை எடுக்க முடிகிறது என அப்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

அதை தொடர்ந்து ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சினையும் மேலும் ஷாக் கொடுத்தது. இவர்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான். இவர்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் விவாகரத்து பிரச்சினை. இவர்களுக்கும் காதல் திருமணம் தான். என்னதான் வாழ்க்கை இஷ்டப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் எதாவது ஒரு புள்ளியில் இருவருக்கும் இடையே பிரச்சினை வரத்தான் செய்யும்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்திலும் விளையாடிய தனுஷ்… இப்படிலாம் கொளுத்தி விடாதீங்கப்பா!..

அதை எப்படி பேசி தீர்வு காண்பது என்பதை யோசிக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு தவறான பாடத்தை புகட்டும் மாதிரியான முடிவாக இருக்கக் கூடாது. மேலே சொன்ன அத்தனை பிரபலங்களும் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் பிரபலங்கள்தான். அவர்கள் இப்படி யோசிக்காமல் முடிவு எடுப்பது அவர்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும்.

shaira

இப்போது இவர்கள் வரிசையில் ஏஆர் ரஹ்மானும் இணைந்திருக்கிறார். இதுதான் இருக்கையிலேயே பேரதிர்ச்சி. 29 வருட திருமண வாழ்க்கை. 1995 ஆம் ஆண்டு பெற்றோர்கள் பார்த்து முடித்த திருமணம். மனைவி சாயிரா அன்பான மனைவி. இரு மகள்கள் மற்றும் ஒரு மகன். சில மாதங்களுக்கு முன்புதான் மூத்த மகளின் திருமணம் நடந்தது.ஏஆர் ரஹ்மானும் சாயிராவும் மேடையில் தோன்றும் போது ஜாலியாக இருப்பார்கள்.

ஆனால் இப்போது இவர்கள் எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதை பற்றி பார்த்திபன் அவருடைய தொணியில் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது: இசை ஸ்வரங்கள் பிரிவதால்தான் பிறக்கும் ஒரு நாதமே.. குடைக்குள் மழை நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது.

இதையும் படிங்க: ஜெயம் ரவி தொடங்கி ஏ.ஆர் ரகுமான் வரை!… 2024-ல் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலங்கள்!…

பிரிவு என்பது துக்கும் மட்டுமல்ல. புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்பந்தப்பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி பிரிவு என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts