லவ்டுடே படத்துல என்னை பைத்தியம்னு சொல்லிட்டான் பிரதீப்!.. பொங்கிய பார்த்திபன்!..
குறும்படங்கள் எடுத்து வந்த பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். இப்படத்தில் ஜெயம்ரவி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 16 வருடங்கள் கோமாவில் இருந்துவிட்டு வரும் இளைஞன், நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியை பார்த்து மிரள்வது போலவும், அன்பால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது என்பது போலவும் இப்படத்தில் திரைக்கதை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடித்தது. ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே அதிக வசூல் பெற்றது இப்படம்தான்.
இந்த படத்திற்கு பின் லவ்டுடே என்கிற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இந்த கால இளசுகள் காதலை எப்படி கையாள்கிறார்கள் என்பதையும், செல்போன் மூலம் அந்தரங்க விஷயங்கள் எப்படி பிரச்சனையாக மாறுகிறது என்பதையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தார். 2022ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற படங்களில் இந்த படமும் இருக்கிறது. அதுவும் மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை கொடுத்த படமாகும்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு வசனம் வரும். ‘பக்காவா பேசிட்டிருந்த நீ பார்த்திபன் மாதிரி பேசுற’ என்பதுதான் அந்த வசனம். இதுபற்றி ஒருபேட்டியில் பேசிய பார்த்திபன் ‘படத்தில் அந்த வசனத்தை கேட்டதும் நானும் மற்றவர்கள் போல் சிரித்துவிட்டேன். ஆனால், என்னை அவர் பைத்தியம் என சொல்லி இருப்பது அப்புறம்தான் புரிந்தது. அவர் ஏன் அப்படி வசனம் வைத்தார் என்பதற்கு பின்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது.
அவர் கோமாளி படம் எடுத்த போது என்னிடம் அசோசியட் இயக்குனராக வேலை செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அது என்னுடைய கதை எனக்கூறி, ரைட்டர்ஸ் சங்க தலைவர் பாக்கியராஜை அணுகினார். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கிருஷ்ணமூர்த்தி கதையும் அது போலவே இருந்ததால் அவருக்கு ரு.10 லட்சம் இழப்பீடு வாங்கி கொடுத்தார் பாக்கியராஜ். அந்த கோபத்தில்தான் பிரதீப் அப்படி வசனம் வைத்திருப்பார் என நினைக்கிறேன். எனக்கு லவ் டுடே படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்ததும் அவரை பாராட்டி ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பினேன். இது என்னுடைய பக்குவம். எதிர்காலத்தில் அந்த பக்குவம் பிரதீப்புக்கும் வரும் என நம்புகிறேன்’ என பார்த்திபன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இப்படிலாம் சினிமாவுக்கு வர்றது சரியா! – லோகேஷை கேள்வி கேட்டு லாக் செய்த நடிகர் பிரசாந்த்..