சொம்பு தூக்கிக்கிட்டு பஞ்சாயத்துப் பண்றது காமெடி... நாட்டாமைல அதான் நடிக்கலயாம்... அவரு..!

by sankaran v |   ( Updated:2024-08-09 16:40:00  )
Nattamai
X

Nattamai

நடிகர்களில் வித்தியாசமான நடிப்பைத் தந்து தனக்கென திரையுலகில் ஒரு புதிய பாதையை அமைத்தவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். இவர் ஊடகம் ஒன்றில் மனம் திறந்த பேட்டியைக் கொடுத்துள்ளார். அதுல அவர் என்னென்ன சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறார்னு பார்க்கலாமா...

நாட்டாமை நான் பண்ண வேண்டியது தான். ஒரு முறை சரத்குமார் சார் எங்கிட்ட கேட்டாரு. நாட்டாமை நான் பண்ண வேண்டியது தான்னு சொல்லிட்டேன். 'அப்படியா எனக்குத் தெரியவே தெரியாதே'ன்னாரு. முதன் முதலா எங்கிட்ட தான் வந்தாங்க. பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த மாதிரி படம்லாம் காமெடியா இருக்குன்னு சொல்லிட்டேன்.

எது நாட்டாமை. 'என்ன சார் சொம்புலாம் வச்சிக்கிட்டு பஞ்சாயத்துப் பண்ணிக்கிட்டு, சந்தனம் தடவிக்கிட்டு. அது எனக்கு ஒத்து வராது'ன்னு சொல்லிட்டேன். அப்படியா எங்கிட்ட சொல்லவே இல்லையேன்னாரு.

அதாவது அவருக்குத் தான் முதன் முதலா இந்தக் கதை வந்ததாவும் நினைச்சிக்கிட்டு இருந்தாரு. இதை நான் எதுக்கு சொல்றேன். தன்னந்தனியா சினிமாவை விட்டுர்றோம். நானும் சினிமாவும் மட்டுமே. தனிக்குடித்தனம். எந்த ஒரு உதவியும் கிடையாது.

அடுத்த படம் வரும்போது வீடு வாங்கிடலாம்னு நினைச்சேன். அதனால எனக்குப் படம்கறது படமே கிடையாது. 35 வருஷமா அதே விளம்பரத்தைப் பயன்படுத்துற மாதிரியே இருக்கு. அபூர்வ சகோதரர்கள் வரும்போது புதிய பாதைக்கு விளம்பரப்படுத்துனேன்.

Parthiban

Parthiban

அதே மாதிரி தான் இப்போவும் பண்றேன். ஆனா இதுல நிக்கிறது பெரிய விஷயம். கமல், ரஜினி சார் மாதிரி லெஜன்ட் இருக்காங்க. நான் இதுவரை சிகரெட்டைத் தொட்டதே கிடையாது. டீன்ஏஜ்ல சாதாரணமா விளையாடுற விளையாட்டுக்கு எல்லாம் போனதே கிடையாது.

சைட் அடிக்கிறதே தப்புன்னு நினைப்பேன். தலை குனிஞ்சிட்டுப் போவேன். ஆனா அதுக்குள்ள ரெண்டு காதல் வரும். ஏன்னா பெண்களுக்கு சட்டை பண்ணாம போனா பிடிக்கும். சட்டை கிழிஞ்சி இருந்தாலும் பிடிக்கும்.

டீன் ஏஜ்ல வந்த நிறைய லவ் வந்து நான் சட்டை பண்ணாம இருந்ததால வந்தது தான். ஆனா நான் அப்போ உஷாரா இருந்தேன். இல்லன்னா எங்காவது கூஜா தூக்கிக்கிட்டுத் தான் இருந்துருக்கணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story