Cinema History
அந்த சம்பவத்துக்கு பிறகு வாழ்க்கையே வெறுத்துட்டேன்… முதல் படத்துலேயே நொந்து போன பார்த்திபன்!..
தற்சமயம் திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் பலரும் ஒரு காலத்தில் சினிமாவில் பெரும் கஷ்டப்பட்டு பிறகுதான் வாய்ப்பை பெற்றிருப்பார்கள். இயக்குனர், தயாரிப்பாளர் என ஏற்கனவே சினிமாவில் இருக்கும் யாரோ ஒருவர் மூலமாக சினிமாவிற்கு வந்திருப்பார்கள்.
தமிழின் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனும் கூட அப்படியாக சினிமாவிற்கு வந்தவர்தான். பார்த்திபன் இயக்கிய, நடித்த பல படங்கள் தமிழில் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. இன்னமும் கூட அவர் சினிமாவில் படங்கள் இயக்கி அதில் நடித்து வருகிறார்.
சினிமாவில் முதன் முதலாக பாக்கியராஜூடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பார்த்திபன். பார்த்திபன், பாரதி ராஜா இருவருமே சினிமாவில் சம காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்துக்கொண்டிருந்தவர்கள். பாக்கியராஜ்க்கு பாரதி ராஜா மூலமாக வாய்ப்பு கிடைத்து சினிமாவில் பெரும் இடத்தை பெற்றுவிட்டார்.
ஆனால் பார்த்திபன் வாய்ப்புகள் கிடைக்காமல் சுற்றிக்கொண்டிருந்தார். எனவே பாக்கியராஜே அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பாக்கியராஜிடம் சேர்வதற்கு முன்பு பார்த்திபன் சினிமாவிற்கு வந்தபோது நடிகனாக வேண்டும் என்றே முயற்சி செய்து வந்தார். அப்போது புது கவிதை என்கிற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு:
அதில் ரஜினிகாந்துடன் ஐந்தாறு காட்சிகளில் பார்த்திபன் நடித்தார். இந்த படம் எஸ்.பி முத்துராமன் இயக்கி புது கவிதை என்னும் திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு இனி நாம் பெரும் நடிகர் ஆக போகிறோம். நாமும் சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும் என ஆசைப்பட்டுள்ளார் பார்த்திபன். படம் வெளியானபோது அவர் தம்பியை அழைத்து கொண்டு சினிமாவிற்கு சென்றார் பார்த்திபன்.
அங்கு அவர் தம்பியிடம் நான் படத்துக்கு வந்தா மக்கள் கூட்டம் குவிஞ்சிரும். நீ போய் படத்தை பார்த்துட்டு நான் எப்படி நடிச்சிருக்கேன்னு சொல்லு என கூறிவிட்டார். படத்தை பார்த்து முடித்துவிட்டு வந்த பார்த்திபனின் தம்பி இந்த ஷோவில் நீ நடிச்ச சீன் எதுவும் வரலை, வேணும்னா அடுத்த ஷோவில் வரலாம் என கூறியுள்ளார்.
அதன் பிறகுதான் படத்தில் பார்த்திபன் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுவிட்டன என்கிற விஷயம் அவருக்கு தெரிந்தது. அதன் பிறகு சினிமா மீதே ஒரு வெறுப்பு வந்தது என ஒரு பேட்டியில் பார்த்திபன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு விஷம் வைத்த சமையல்காரர்.. அதன்பின் நடந்துதான் ஹைலைட்!…