தமிழில் சிறப்பான நடிகர்களாக அறியப்படும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் பசுபதி. ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு பெற்ற பொழுது தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பசுபதி. ஆனால் அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அவருக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
பொதுவாக நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு பழக்கம் உண்டு. தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை அவர் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க வைப்பதுண்டு.
நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், சந்தான பாரதி போன்ற நடிகர்களை அதிகமாக கமல்ஹாசனின் திரைப்படங்களில் காண முடியும். அதற்கு காரணம் அவர்களது தனிப்பட்ட நடிப்பே ஆகும். அந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் பசுபதியையும் சேர்த்துக் கொண்டார் கமல்ஹாசன்.
விருமாண்டி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் பசுபதிக்கு அதனை தொடர்ந்து மும்பை எக்ஸ்பிரஸ், மருதநாயகம் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மருதநாயகம் முழுதாக படமாகவில்லை
பசுபதி கோபமாயிடுவார்:
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பசுபதிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அந்த கதாபாத்திரம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது அப்பொழுது ஒருமுறை ரஞ்சித் தனது பேட்டியில் பசுபதி குறித்து கூறும் பொழுது எந்த ஒரு இயக்குனரும் பசுபதியிடம் நடித்து காட்டி அந்த மாதிரியே நடிக்க சொன்னால் அது பசுபதிக்கு சுத்தமாக பிடிக்காது என கூறியிருந்தார்.
விருமாண்டி படம் குறித்து அதில் பணிபுரிந்த ஒருவர் பேசும் பொழுதும் இதே விஷயத்தை கூறியுள்ளார். பசுபதி இதுகுறித்து விளக்கம் அளிக்கும் போது சினிமா ரசிகர்கள் மத்தியில் நான் தான் நடிப்பேன், எனக்கு பின்னால் நடித்துக் காட்டிய இயக்குனர்களை அவர்களுக்கு தெரியாது எனவே எனது நடிப்பு தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…