வெளியானது பிரேம்ஜி திருமண போட்டோ!.. ஜோடி பொருத்தம் செம சூப்பர்!.. வைரல் பிக்!...
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி. வெங்கட்பிரபு சென்னை 28 படத்தை இயக்கிய போது அந்த படத்தில் நடித்தவர். சிம்பு மற்றும் ரஜினி ஸ்டைலை பின்பற்றி தனக்கென ஒரு மேனரிசத்தை உருவாக்கி கொண்டவர். ட்ரோலில் சிக்கினாலும் இவரை ரசிக்கவும் ஒரு கூட்டம் உண்டு.
சென்னை 28 படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, கோவா, பிரியாணி, மங்காத்தா ஆகிய படங்களில் பிரேம்ஜி நடித்திருக்கிறார். பிரேம்ஜிக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார் வெங்கட்பிரபு. கதை இல்லாமல் கூட வெங்கட்பிரபு படம் இயக்குவார். ஆனால், தம்பி பிரேம்ஜி இல்லாமல் படமெடுக்கமாட்டார் என நக்கலடிப்பார்கள்.
மாங்கா போன்ற சில படங்களில் கதையின் நாயகனாகவும் பிரேம்ஜி நடித்திருக்கிறார். பிரேம்ஜிக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பல படங்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால், அது எல்லாமே மொக்கை படங்கள்.
45 வயதை நெருங்கிய பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில்தான், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என இந்த வருட துவக்கத்திலேயே பிரேம்ஜி சொன்னார். எனவே, மணப்பெண் பற்றி பல வதந்திகளும் பரவியது. இந்நிலையில்தான், பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை சமீபத்தில் இணையத்தில் கசிந்தது.
ஜுன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக அதில் சொல்லப்பட்டிருந்தது. அதேபோல், நண்பர் ஒருவர் பத்திரிக்கையை வெளியிட்டு விட்டதாகவும், பிரைவசி கருதி யாருக்கும் சொல்லவில்லை எனவும், விரைவில் திருமண புகைப்படத்தை பகிர்வேன் எனவும் சொல்லி இருந்தார்.
இந்நிலையில், நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில் பிரேம்ஜியின் திருமண விழா புகைப்படத்தை வெங்கட்பிரபு இணையத்தில் பகிர்ந்து மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.