Home latest news எப்படி இருந்த பொன்னம்பலம் இப்படி ஆயிட்டாரே!. வீடியோ பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!…

எப்படி இருந்த பொன்னம்பலம் இப்படி ஆயிட்டாரே!. வீடியோ பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!…

ponnambalam

80ளில் தமிழ் சினிமாவில் சண்டை காட்சி நடிகராக நடிக்க வந்தவர்தான் பொன்னம்பலம். ஒரு கட்டத்தில் ஹீரோக்களுடன் தனியாக மோதும் சண்டைகாட்சி நடிகராக மாறினார்.
குறிப்பாக விஜயகாந்தின் படங்களில் மிகவும் அதிகமாக நடித்தார் பொன்னம்பலம். பொன்னம்பலத்தை தனது ஏராளமான படங்களில் பயன்படுத்தினார் விஜயகாந்த். மேலும் பிரபு, சரத்குமார், சத்யராஜ் போன்ற பல நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் பொன்னம்பலம்.. நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.. மருத்துவ சிகிச்சைக்கு திரை பிரபலங்கள் உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்தார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இவரின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார். அதேபோன்று நடிகர் கமலும் உதவி செய்ததாக செய்திகள் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

இந்நிலையில்தான் அவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஏனெனில் எழுந்து நிற்க முடியாமல், நடக்க முடியாமல் அவர் வீல் சேரில் அமர்ந்துள்ளார். அவரது வீட்டின் அருகே நடக்கும் ஒரு விழாவில் தாரை தப்பட்டை ஒலிக்க அவர் அமர்ந்துகொண்டே நடனமும் ஆடுகிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ‘எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!.. அவருக்கு என்னாச்சி?’ என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Previous articleஅவரு லிங்குசாமி இல்ல!.. லின்க் சாமி!.. தேவயானிக்கு காதல் வர காரணமே இவர்தான்!..
Next articleWith love: வித் லவ் படத்தின் முதல் விமர்சனம்: ரஜினி இப்படி சொல்லிட்டாரே