சாலிகிராமத்தையே விலைக்கு வாங்கியிருப்பேன்!.. அந்த அளவு சொத்து இருந்தும் என்ன செய்தார் தெரியுமா கபாலி?..
ஒரு காலத்தில் கில்லாடி வில்லனாக நடித்து அசத்தியவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார்.இயல்பாகவே பொன்னம்பலம் விளையாட்டில் ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார்.
ஜிம்னாஸ்டிக், லாங் ஜம், ஹை ஜம் போன்ற விளையாட்டில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேசிய அளவிலான தடகளப் போட்டியிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இந்த ஒரு திறமைதான் அவரை சினிமாவில் சேர்த்தது.
‘கலியுகம்’ என்ற படத்தின் மூலம் முதன் முதலாக வில்லனாக நடித்த பொன்னம்பலம் அதனை தொடர்ந்து ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் தான் பக்கா வில்லத்தனத்தை காட்டினார். அந்தப் படத்தில் கபாலி என்ற பெயரில் நடித்ததனால் அன்று முதல் இவரை கபாலி என்றே அழைக்கத் தொடங்கினர்.
கருப்பு நிறம், கட்டுமஸ்தான உடம்பு, நல்ல உயரம் என வில்லனுக்கு ஏற்ற தோற்றத்தில் இருந்ததால் வில்லன் கதாபாத்திரத்தில் செட் ஆகிவிட்டார். அதுவே ஒரு சமயம் போர் அடித்ததால் காமெடி ரோலுக்கு இறங்கினார். முதன்மை வில்லன், துணை வில்லன், குரூப் ஃபைட்டர், நகைச்சுவை நடிகர் என அனைத்துப் பரிமாணங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் கபாலி.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மயில்சாமியின் மரணம் இவரை அதிகமாக பாதித்தது. கபாலிக்கும் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கின்றது. நடிகர் மயில்சாமியை பற்றி பேசும் போது ‘ நானும் மயில்சாமியும் ஒன்று, அவனும் சொத்து சேர்க்கல, நானும் சேர்க்கல, நான் மட்டும் சினிமாவில சம்பாதிச்சதை வச்சிருந்தா இந்நேரம் சாலிகிராமத்தையே விலைக்கு வாங்கியிருப்பேன், ஆனால் அத நான் செய்யல, ஏன்னா இருந்த சொத்துல 60 % தானத்திற்கே கொடுத்துவிட்டேன், மயில்சாமியும் அப்படித்தான், நாங்க இரண்டு பேரும் தானமாக நிறைய செய்திருக்கிறோம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : மேடையில் ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன உதயநிதி!.. ஸ்டோரியை கேட்டு ஷாக் ஆன ஸ்ரீகாந்த்.. அப்படி என்ன மேட்டரு?..