கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!.. காசு எல்லாம் போச்சி!.. புலம்பும் நடிகர்!..

Kamal
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. போராட வேண்டும். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய நடிகர்களுடன் பழக்கம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு சுலபமாக கிடைக்கும். சினிமாவில் நடனம், சண்டை, நடிப்பு, கலை, எடிட்டிங், ஒலி, ஒளிப்பதிவு என பல துறைகள் இருக்கிறது.
இதில் மற்ற துறையில் இருப்பவர்கள் கூட நடிப்பதற்கு சுலபமாக வந்துவிட முடியாது. பெரிய இடத்தில் இருப்பவர்கள் மனது வைக்க வேண்டும். சண்டை மற்றும் நடன காட்சிகளில் நடித்து கொண்டிருந்த மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரனின் வில்லன் நடிகராக நடிக்க வைத்தவர் விஜயகாந்த். புலன் விசாரணை படத்தில் சரத்குமாரை வில்லனாக்கியதும் அவர்தான்.

ponnambalam
விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்தவர் பொன்னம்பலம். பல திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த அவரை வில்லன் நடிகராக மாற்றியது விஜயகாந்துதான். விஜயகாந்த் படங்கள் என்றாலே அவர் பொன்னம்பலத்தோடு மோதும் ஒரு தனிப்பட்ட சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இந்நிலையில், சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பு பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘சண்டைக்காட்சி நடிகராக இருக்கும்போது ஒரு நாளைக்கு 500 அல்லது 1000 ரூபாய் கொடுப்பார்கள். அப்போதுதான் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படம் உருவானது. அப்போது ‘நீ இந்த படத்தில் சில காட்சிகளில் நடி’ என சொன்னார் கமல்.
‘காசு கொடுத்தா நடிப்பேன். ஒரு நாளைக்கு எனக்கு 2 ஆயிரம் கொடுங்க’ என்றேன். ‘அதை நீ தயாரிப்பாளிடம் பேசிக்கொள்’ என சொல்லிவிட்டார். உடனே அப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் வீட்டிற்கு போய் ‘ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நடிக்கிறேன்’ என சொன்னேன்.
‘அட நீ 5 ஆயிரம் கேட்பன்னு நினைச்சேன்’ என சொன்னார் அவர். ‘அப்ப அதுவே கொடுங்க’ என்றேன். ‘நீ கேட்ட 2 ஆயிரத்த கொடுக்குறேன். சந்தோஷமா நடி’ என சொல்லிவிட்டார். ‘ஐயோ 3 ஆயிரம் போச்சே. 10 நாளைக்கு நடிச்சா 30 ஆயிரம் பேச்சே. வட போச்சே’ என சிரித்துக்கொண்டேன். கமல் சார்தான் என்னை நடிக்க வைத்தார்’ என பேசியிருந்தார் பொன்னம்பலம்.