Home > Cinema News > பீரில் கலந்து கொடுத்த விஷம்!. சூனியம் வைத்த சொந்த அண்ணன்.. ஐயோ பாவம் பொன்னம்பலம்!...
பீரில் கலந்து கொடுத்த விஷம்!. சூனியம் வைத்த சொந்த அண்ணன்.. ஐயோ பாவம் பொன்னம்பலம்!...
X
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கட்டுமஸ்தான உடம்புடன் அனைவரையும் மிரளவைத்தவர் நடிகர் பொன்னம்பலம். இவரின் சினிமா பயணம் எப்படிப் பட்டது என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும் போது மனது பதை பதைத்தது. இப்படி எல்லாம் மனுஷன் கஷ்டப்பட்டிருக்கிறாரே என வருந்தியது.
செய்வினை வைத்த உறவுகள்
பொன்னம்பலத்தின் அப்பாவுக்கு 4 மனைவிகளாம். இவர் 4வது மனைவியின் மகனாம். இவருக்கு மூன்றாவது மனைவியின் மகன் தான் மேனேஜராகவும் இருந்தாராம். அதாவது பொன்னம்பலத்திற்கு அண்ணன். பொன்னம்பலத்தின் வளர்ச்சியைத் தாங்க முடியாத அந்த அண்ணன் ஸ்லோ பாய்சனை அவர் குடிக்கும் பீரில் கலந்து குடுத்து விட்டாராம். அதை பொன்னம்பலும் சாப்பிடநேராக கிட்னியில் போய் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை எப்படி அவர் தெரிந்துகொண்டார் என்றால் ஒரு நாள் இரவு தூக்கமின்மையால் மாடியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாராம் பொன்னம்பலம். அப்போது நடு ராத்திரியில் கீழே பொன்னம்பலத்தின் உதவியாளர் மற்றும் அவரது அண்ணன் ஒரு குழியை தோண்டி பொம்மை, பொன்னம்பலத்தின் லுங்கி, அதன் பின் சில மாந்த்ரீக பொருள்களை வைத்துக் கொண்டிருந்தார்களாம். இதை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொன்னம்பலம் மறு நாள் அவரது உதவியாளரை வரவழைத்து கேட்க அதன் பின் தான் விபரம் தெரிந்திருக்கிறது.
பின் அண்ணனை வரவழைத்து எல்லாம் பேசி சரிபண்ணாராம். ஆனாலும் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்திருக்கிறது.
டையாலிஸிஸ் பிரச்சினையால் அவதி
ஒரு கட்டத்தில் கிட்னியை மிகவும் பாதித்ததால் அடிக்கடி டையாலிஸ் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பொன்னம்பலம். அதற்காக பல வேதனைகளை அடைந்திருக்கிறார்.ஒரு ஸ்போர்ட்ஸ் மேனாக இருந்து கொண்டு நமக்கு இந்த நிலைமையா? என்று மிகுந்த வேதனையடைந்திருக்கிறார்.
மேலும் டையாலிஸிஸ் பண்ண சில நேரம் பணம் இல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் சினிமாவில் சம்பாதிச்சதை 60 சதவீதம் பல பேருக்கு தானமாக வழங்கியிருக்கிறார் பொன்னம்பலம். ஆனால் அவருக்கு ஒரு உதவி என்று வரும் போது காசு இல்லாமல் அவதி பட்டுள்ளார்.
ஓடி வந்த உதவிய நல்லுள்ளங்கள்
தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் ரஜினி , கமல் என அனைவரும் பொன்னம்பலத்தை நலம் விசாரித்திருக்கிறார்கள். நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட 3 வருஷமாக பொன்னம்பலம் சினிமாவில் நடிக்கும் போது அவரது வீட்டை எப்படி கவனித்து வந்தாரோ அதே மாதிரி தனுஷ் 3 வருஷமாக பொன்னம்பலத்தின் வீட்டை கவனித்து வந்திருக்கிறாராம். அதே போல் இன்று வரை சரத்குமார் பக்கபலமாக இருந்து வருகிறாராம். மேலும் ஜெயம் ரவி, கே.எஸ்.ரவிக்குமார், அர்ஜுன், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோரும் உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர்.
இவர்களை எல்லாம் தாண்டி சிரஞ்சீவி பொன்னம்பலத்திற்கு தேவையாக அனைத்து மருத்துவ செலவுகளையும் அவரே ஏற்று இன்று பழைய பொன்னம்பலமாக மாற்றியிருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட 45 லட்சம் வரை செலவாகியிருக்கிறதாம். அந்த செலவுகளை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டாராம்.
மனதை காயப்படுத்திய விஜய் அஜித்
அஜித்தை அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது இருந்தே ஒரு தம்பியாகவே நினைத்து பழகினாராம், அதே போல் செந்தூரப்பாண்டி படத்தில் இருந்தே விஜய் அவருக்கு நல்ல பழக்கமாம். ஆனால் யார் அவரை பற்றி தப்பா சொன்னார்களோ தெரியவில்லை. இதுவரைக்கும் அவருக்கு போன் செய்து ஒரு தடவ கூட நலம் விசாரிக்கவில்லையாம். அது தான் அவருக்கு மிகுந்த மனவேதனையாக இருக்கிறதாம். மேலும் பொன்னம்பலம் கூறும் போது ‘ஒரு தமிழ் நடிகருக்கு ஆந்திராவில் இருக்கும் ஒரு நடிகர் இந்த பெரிய உதவியை செய்வது என்பது நம்பமுடியாத ஒரு பெரிய காரியம் ஆகும்’ என்று கூறினார்.
Next Story