இருட்டு அறையில் முரட்டுக்குத்தும் பருத்திவீரனும் ஒன்னா?!.. ஞானவேல் ராஜாவை விளாசும் பொன் வண்ணன்...
Paruthiveeran: பருத்துவீர்ன் படம் தொடர்பாக இயக்குனர் அமீர் எழுப்பிய குற்றச்சாட்டுகளும், அமீரை கடுமையாக விமர்சித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டியும், அதற்கு அமீர் கொடுத்த பதிலடியும் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பருத்திவீரன் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு செலவை நான் செய்து படத்தை முடித்தேன். ஆனால், படம் முடிந்ததும் என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கிவிட்டனர். நான் செலவு செய்த பணத்தையும் எனக்கு கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டு. ஆனால், படத்தில் பொய் கணக்குகளை அமீர் எழுதியிருந்தார். திருடினார் என்றெல்லாம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்தார்.
இதையும் படிங்க: பருத்திவீரன் படத்துக்காக இவ்வளவு கஷ்டமா?!.. பாத்து பாத்து செய்த இயக்குனர் அமீர்!..
அதன்பின் சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக களம் இறங்கி அமீர் சொல்வதுதான் உண்மை என அறிக்கை வெளியிட்டனர். பருத்திவீரன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு நான்தான் பணம் கொடுத்தேன். அந்த பணத்தையும் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை என சசிக்குமார் சொன்னார்.
பருத்திவீர்ன் உருவாகும்போது நான் உடனிருந்தேன். அமீர் அண்ணன் பலரிடம் என்னை அனுப்பி கடன் வாங்கி வர சொன்னார். அப்படித்தான் அந்த படத்தை அமீர் முடித்தார். ஞானவேல் ராஜா மிகவும் தவறாக பேசியிருக்கிறார் என சமுத்திரக்கனி சொன்னார். எனவே, சமூகவலைத்தளங்களில் அமீருக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஞானவேல் ராஜா மீது கோபத்தில் சுதா கொங்கரா!.. மொத்த இமேஜை இப்படி சல்லி சல்லியா உடைச்சிப்புட்டாரே!..
இயக்குனர் அமீரை சூர்யா குடும்பம் இப்படி ஏமாற்றலாமா?.. இதுபற்றி நன்றாக தெரிந்த கார்த்திக்கும், சூர்யாவும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?.. என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் அப்பாவாக நடித்த நடிகர் பொன்வண்ணனும் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்
பருத்திவீரன் திரைப்படம் பாதியில் கைவிடப்பட்ட போது மீதிப்படத்தை முடிக்க இயக்குனர் அமீர் நிறைய கடன் வாங்கியும், பல சிரமங்களை தாங்கியும் அப்படத்தை எடுத்து முடித்ததை நேரில் பார்த்தவன் நான். அவரை திருடன், படம் எடுக்க தெரியாதவன் என்பது போல் நீங்கள் (ஞானவேல் ராஜா) கொச்சைப்படுத்துவதை ஏற்கவே முடியாது.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை தயாரித்தவர்தானே நீங்கள்?.. அதே அளவுகோலில் பருத்திவீரன் படத்தின் படைப்பாளியையும் எடை போட்டு விட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ள பொன்வண்ணன்.. ‘உங்கள் பேட்டிகளில் திமிரும், வக்கிரமும் இருந்தது.’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டேன்… ஹீரோவான காரணத்தை உடைத்த அமீர்…