இவரை மாதிரி ஒரு சின்சியர் ஆர்ட்டிஸ்ட்ட நான் பார்த்ததே இல்ல... யாரைச் சொல்கிறார் நடிகர் பிரபு

by sankaran v |   ( Updated:2022-10-05 08:45:51  )
இவரை மாதிரி ஒரு சின்சியர் ஆர்ட்டிஸ்ட்ட நான் பார்த்ததே இல்ல... யாரைச் சொல்கிறார் நடிகர் பிரபு
X

Jothika

சந்திரமுகி படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தப்படம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வாவேலு, நாசர் என பல நட்சத்திரங்களுடன் வெளியானது. பட்டி தொட்டி எங்கும் மூலை முடுக்கு எங்கும் படம் மாபெரும் ஹிட் ஆனது.

Prabhu2

ஜோதிகா சந்திரமுகி வேடத்தில் வந்து கிளைமாக்ஸ் காட்சியில் கலக்கினார். இனி அந்தப்படத்தைப் பற்றி நடிகர் பிரபு எப்படி அவரது நினைவலைகளைப் பகிர்கிறார் என பாருங்க.

எங்களுக்கு எல்லாம் பெரிய இன்ஸ்பிரேஷன் அண்ணன் சிவக்குமார். அவர் எப்படி எக்சர்சைஸ் பண்றாரு. தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்கும்? எப்படி பேமிலியைப் பார்த்துக்கணும்.

chandramuki

அவங்க வீட்ல ஒரு சந்திரமுகி இருக்காங்க. அவங்க ஜோதிகா. சந்திரமுகி படம் எடுக்கும்போது இந்த கேரக்டரை ஜோதிகா பண்ணினா எப்படி இருக்கும்னு தோணுச்சு. இந்தப்படம் யாரு நடிச்சாலும் ஓடும் சார்னு சொன்னதும் அவங்க தான்.

அயன் படத்துல எனக்கு அருமையான ரோல். ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நாள் ஸ்டேஜில சொல்றாரு. பிரபுசாரோட ஃபேன் நானுன்னு. ரொம்ப சந்தோஷப்பட்டேன். எங்க அப்பா வடிவேலுவப் பத்தி என்ன சொல்வாருன்னா...

டேய் மதுரைல இருந்து ஒரு பையன் வந்துருக்கான்டா...அடேங்கப்பா என்னா காமெடி பண்றான்னு சொல்வாரு.

Vadivelu

அண்ணனோட பாட்டு சாங் யாராலயும் மறக்க முடியாது. அதுல ரஜினி, ஜோதிகா, நானு, வடிவேலுன்னு எல்லாருமே இருக்காங்க. ரஜினி சார் வந்து அவரு கேரக்டர்ல போயி உட்கார்ந்துருக்காரு. 816 நாள் இந்தப்படம் ஓடிருக்கு. நானும் ரஜினி சாரும் சூட்டிங் ஒண்ணா போவோம்.

அங்க போனா ஜோதிகா ரெடியா இருப்பாங்க. ரஜினி சார் உள்ள போயி அம்மா...மேடம்...சாரி மேடம்...நாங்க லேட்டா வந்துருக்கோம்....நானும் சொல்வேன்... ஜோ...சாரிம்மா லேட்டா வந்துட்டோம்னு சொல்வேன். அந்த மாரி ஒரு சின்சியர் ஆர்டிஸ்ட். இப்ப இருக்குற யங் ஆர்டிஸ்ட்டுக்கிட்ட வந்து ஜோ மாதிரி ஒரு சின்சியர் ஆர்ட்டிஸ்ட்ட நான் பார்த்ததே இல்ல.

வாசு சார் சொல்லிக்கொடுத்து அவ பண்ணினான்னா அவளோட டெடிகேஷன். அடுத்து நயன்தாரா...வெரி சுவீட் கேர்ள். துருக்கில கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் பாட்டு எடுத்தாங்க. நாங்க எல்லாருமே ஒரு மினி பஸ்ல எல்லாம் போனோம்.

சார் இப்படி வந்து உட்காருங்கன்னு சொன்னா இல்ல சார் நான் கண்டக்டர். இப்படி தான் நிற்பேன்...அப்புறம் புரொடியூசர் சார் நல்லாருக்கிங்களா சார்னு கேட்பார். அப்புறம் வாசு சார். நாங்க ரெண்டு பேரு செய்ல்டு ஹ_ட் பிரண்ட்ஸ்;. மன்னன், சந்திரமுகி 2 படமும் மாபெரும் ஹிட்.

Next Story