நிஜ முத்துப்பாண்டியாவே மாறிய பிரகாஷ்ராஜ்! ‘கில்லி’ படத்தில் இயக்குனரை மிரட்டிய சம்பவம்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர் அனைவரையும் கவர்ந்தவர். இவருக்கு என சினிமா துறையில் ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது.

ரஜினி, விஜய், கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் அபிமானங்களை பெற்றவர், அதுவும் விஜய் - பிரகாஷ்ராஜ் காம்போ என்றால் அதற்கு ஒரு தனி எதிர்பார்ப்பு தான். விஜயுடன் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் கில்லி படத்தில் ‘ஹாய் செல்லம்’ என்ற தன்னுடைய ஒரு வசனத்தால் இன்று வரை ரசிகர்களிடம் முத்துப்பாண்டியாகவே வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க! அடக்கி இருக்கிறவனை வெடிக்க வச்சிராதீங்க.. என்னாச்சு வடிவேலுவுக்கு?

கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழ்கிறார்கள். விஜய்யை விட பிரகாஷ்ராஜை தான் அதிகமாக ரசித்து வருகிறார்கள். ஆனால் இந்த படத்தில் முதலில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்திற்கு 8 பேரை டெஸ்ட் செய்து இருந்தாராம் படத்தின் இயக்குனர் தரணி.

ஆனால் தெலுங்கில் ஒக்கடு படத்தின் ரீமேக் தான் தமிழில் கில்லி திரைப்படம். தெலுங்கில் பிரகாஷ் ராஜ் தான் நடித்திருந்திருக்கிறார். ஆனால் தமிழில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று தரணி தேடிக் கொண்டிருக்க இதை அறிந்த பிரகாஷ்ராஜ் தரணியிடம் என்னை விட்டு வேறு யாரையோ வைத்து டெஸ்ட் எடுக்கிறாயா? கடைசியில் என்னிடம் தான் வருவாய் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

அதைப்போல வேறு வழியில்லாமல் கடைசியில் பிரகாஷ்ராஜிடம் போனாராம் தரணி. உங்களிடம் ஒரு கதை சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறார். கதையை கேட்டதும் பிரகாஷ்ராஜ் இது நன்றாக இருக்கிறதே. நடிக்கலாம் என சொன்னாராம். அதன்பிறகு தரணி இது நீங்கள் தெலுங்கில் நடித்த ஒக்கடு திரைப்படத்தின் கதைதான் என்ற சொல்ல அந்தக் கதையா இது என்று மிகவும் ஆச்சரியமாக கேட்டாராம். ஏனெனில் தெலுங்கில் ஒக்கடு திரைப்படத்தில் சில பல காட்சிகளை மாற்றியமைத்து தான் தமிழில் கில்லி திரைப்படமாக எடுத்திருக்கிறார் தரணி. அதனாலேயே தெலுங்கை விட தமிழில் அதிகளவு ஓடி சாதனை படைத்திருக்கிறது கில்லி திரைப்படம்.

 

Related Articles

Next Story