கடைசி நிமிடத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் இணைந்த நடிகர்! அதுக்குத்தான் இந்த திடீர் சந்திப்பா?

by Rohini |   ( Updated:2025-05-07 05:57:31  )
jana
X

jana

jananayagan: விஜய் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய விஜய் மீண்டும் பயனூரில் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.

அதன் பிறகு அரசியலில் முழுமூச்சாக இறங்க இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக ஒரு அரசியலை பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ஒரு பெரும் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் படம் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கத்தான் செய்யும்.

அதிலும் அவர் அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்தப் படம் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பிரச்சனையை எதிர்கொள்ளும் என சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற ஒரு முடிவில்தான் இருக்கிறார் விஜய். சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார். 20 வருடங்களாக விஜயுடனும் பவன் கல்யாணுடனும் நான் பழகி வருகிறேன். எந்த ஒரு அரசியல் விஷயத்தை பற்றியும் நாங்கள் பேசியது இல்லை.

ஆனால் இவர்களின் அரசியல் எடுபடுமா என்பது போல பேசி இருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த ஒரு கருத்தை சொன்ன அதே நாளில் மாலை நேரத்தில் விஜயை போய் சந்தித்து இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் பெரும்பாலும் அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்களை பற்றியும் அவருடைய தனிப்பட்ட கருத்தை மிக தைரியமாக சொல்லக்கூடியவர். அப்படித்தான் விஜயின் அரசியலை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கூறிய அன்றே மாலையில் விஜயை போய் சந்தித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இது எந்த வகையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் என்றெல்லாம் ரசிகர்கள் புலம்பி வந்தார்கள். ஆனால் ஜனநாயகன் படத்தில் இப்போது பிரகாஷ்ராஜ் இணைந்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அவருடைய காட்சிகள் இன்றிலிருந்து தான் படமாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

prakashraj

ஏற்கனவே விஜய்யின் பல படங்களில் பிரகாஷ்ராஜ் இருந்திருக்கிறார். விஜய்க்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையே இருக்கும் அந்த கெமிஸ்ட்ரி அனைவருக்கும் ஒரு பிடித்தமான கெமிஸ்ட்ரி. அதை விஜயின் கடைசி படத்திலும் அமையப் போகிறது என்பதை பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு ஒருவித சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது.

Next Story