ஆடு மேய்க்கும் சூப்பர்ஸ்டார் ’மகன்’… ஒரு லவ்வர் பாயை இப்படி சாச்சிப்புட்டீங்களே…

mohanlal
Mohanlal: தமிழ் சினிமாவில் அப்பாவை பின்பற்றி நடிக்க வரும் வாரிசு பிரபலங்கள் தற்போது அதிகம். இது எல்லாம் மொழிகளிலும் நடக்கும் தொடர் வாடிக்கை கதை தான். சில நடிகர்கள் மட்டுமே அதே புகழை பெற்று தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
ஆனால் இதில் சில நடிகர்கள் எத்தனை வருடம் போராடினாலும் அவர்களுக்கு தந்தையின் புகழையும் ஒரு பகுதி கூட கிடைக்காது. அப்படி கிடைத்த புகழை கூட தக்க வைக்க விரும்பாமல் நாட்டை விட்டே சென்று ஆடு மேய்க்கும் தொழிலில் இருக்கும் வாரிசு பிரபலம் குறித்த தகவல் பலரை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
இதையும் படிங்க: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!
மலையாள சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகராக தற்போது வரை இருந்து வருபவர் மோகன்லால். இவருடைய மகன் பிரணவ் மோகன் லால் ஹிரிதயம் படம் மூலம் ஹீரோவாக ஹிட் கொடுத்தார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
பிரணவ் மோகன்லால் குழந்தை நட்சத்திரமாக மோகன்லாலின் புனர்ஜனி படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு அவருக்கு கேரள அரசின் குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பல படங்களின் பணி புரிந்திருக்கிறார்.
இதையும் படிங்க: Biggboss Tamil: உன் கேரக்டரை பண்ண துப்பு இல்லை… சவுண்ட் சரோஜாவாக மாறிய சவுந்தர்யா… ஆட்டம் பத்திக்கிச்சு…

pranav mohanlal
இரண்டு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே அவன் நடிக்க முடிவெடுத்திருக்கிறான். ஒரு வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என நான் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு அவன் இன்னும் சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. அவன் தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளவே இந்த முடிவை எடுத்திருக்கிறான் என நான் நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.