இவ்ளோ திறமை இருந்தும் பிரசாந்த் பிக் அப் ஆகாதது ஆச்சரியம் தான்..!!!
தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பல திறமைகளை வளர்த்து இருந்தார் நடிகர் பிரசாந்த். குதிரையேற்றம், நல்ல பியானா வாசிப்பார், கிராபிக் டிசைனர், சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக், பைக் ரைடிங், பரதநாட்டியம்னு ஆல் ரவுண்டரா இருப்பவர் பிரசாந்த்.
எல்லாத்தையும் கத்துக்கிட்டது சினிமாவுக்கு உள்ள வரவான்னு கேட்பீங்க. ஆனால் அந்த ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும். ஆனா இவருக்கு இல்ல.
நடிகனா வருவேங்கறது அவருக்கே தெரியாதாம். இவருக்கு படிப்பு முடிச்சதுக்கு அப்புறம் இரண்டு மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு. பெரிய டாக்டராவோம்னு நினைச்சாரு. ஓகே.
டாக்டர் சீட் கிடைச்சாலும் பரவாயில்ல. யாராவது ஏழைகள் படிச்சிட்டுப் போட்டும். நாம தந்தையோட விருப்பத்தின் பேரில் நடிகராவோம்னு முடிவு பண்ணினார். காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் டிரினிடி காலேஜ் ஆப் லண்டன்ல போய் படிச்சாரு.
ஏ.ஆர்.ரகுமான்லாம் படிச்சாரு. இளையராஜாவே அங்க போய் பெயிலானார்னு சொல்வாங்க. இதை வச்சி நாம முன்னேறிடலாம்னு நினைக்காம அடுத்தடுத்த படங்கள்ல ஒவ்வொரு திறமையா வளர்த்துக் கொள்வார். ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் முக்காலா முக்காபுலா பாடலுக்கு கிராபிக் டிசைனரோட சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்காராம்.
இவர் ஒரு டெக்கி. இன்றைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என்னவெல்லாம் வந்துருக்கோ அதைப் பற்றிய அப்டேட் எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிக்கிடுவாராம்.
இவர் ஒரு புட்டி. நல்லா சாப்பிடுற ஆளு. அதே போல நல்லா உடற்பயிற்சியும் செய்வார். பல தலைமுறைகளா இவரது குடும்பம் நடிகர் குடும்பம் தானாம்.
பிரசாந்தும், விக்ரமும் உறவு முறைகள் தானாம். இதனால் தான் ஒரு கால கட்டம் வரை இரண்டு பேருமே வெளியே சொல்லிக்கிறது இல்லையாம். பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வா என்றது உலகம் என்ற பாடலை இவர் தான் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
பிரசாந்த் வாட்சப் தவிர எந்த ஒரு சோஷியல் மீடியாவுலயும் இல்லையாம். ஜீன்ஸ் படம் முதலில் அஜீத் மற்றும் அப்பாஸ்கிட்ட தான் போனது. ரெண்டு பேரும் அதிகமான கமிட்மெண்டுடன் இருந்ததால் ஒத்துக்கலயாம்.