பிரசாந்தின் இந்த நிலைமைக்கு காரணமே சத்யராஜ்தான்! நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த தியாகராஜன்

Published on: December 22, 2023
pra
---Advertisement---

Actor Prasanth: 90களில் ஒரு சார்மிங் ஹீரோவாக விஜய், அஜித்தையே ஓவர் டேக் செய்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். அழகான தோற்றம்,  நல்ல நிறம் என பெண்களை மயக்கும் ஒரு ஆணழகனாக அந்த நேரத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து காதல் கதைகளை மையப்படுத்தி அமையும் படங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தவர் பிரசாந்த். தமிழ் நாடு மட்டுமில்லாமல் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகராகவும் பிரசாந்த் இருந்து வந்தார்.

இதையும் படிங்க: டைட் ஜாக்கெட்டில் சும்மா தெறிக்குது!.. கில்மா லுக்கில் கிக் ஏத்தும் யாஷிகா ஆனந்த்…

ஆனால் முதலில் பிரசாந்தை சினிமாவிற்குள் கொண்டு வரவேண்டும் என்பது தியாகராஜனின் எண்ணம் இல்லை என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்றுதான் எண்ணியிருக்கிறார்.

சொல்லப்போனால் ஆரம்பத்தில் தியாகராஜனுக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பதே சில பேருக்கு தெரியாதாம். அதை வெளிச்சம் போட்டு காட்டியவர் நடிகர் சத்யராஜ்தானாம். தியாகராஜனை பார்க்கும் போது இன்னும் திருமணமாகாத ஒரு இளைஞர் போலத்தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது என சத்யராஜ் பல பேரிடம் கூறினாராம்.

இதையும் படிங்க: ரஜினி அதுக்கு வொர்த்!. ஆனா கிடைக்கவே இல்ல.. கடைசி வரை வருத்தப்பட்ட பாலச்சந்தர்…

அதை அறிந்து பிரதாப் போத்தன் தன் படத்தில் பிரசாந்தை நடிக்க வைக்க தியாகராஜனிடம் கேட்டாராம். ஆனால் அவர் மருத்துவத்துக்கு படிக்க போகிறார் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அதன் பிறகு  பாலுமகேந்திரா வந்து கேட்டாராம். அவரிடம் நோ சொல்லி அனுப்பி விட்டாராம்.

அதனை அடுத்து ராதாபாரதி தியாகராஜனிடம் 12 நாள்கள் மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு போகச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தி கேட்டதனால் வெளிவந்த படம்தான் ‘வைகாசி பொறந்தாச்சு’. படம் வெளியாகி பார்க்கும் போது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அதனை தொடர்ந்து பிரசாந்த் சினிமா பக்கமே சென்று விட்டதாக தியாகராஜன் கூறினார்.

இதையும் படிங்க: உனக்கென்ன ரஜினி – விஜயகாந்துன்னு நினைப்பா?!. மோகனின் ஆசைக்கு ஆப்பு வைத்த இயக்குனர்..

இதற்கிடையில் பாலுமகேந்திரா தியாகராஜனிடம் வந்து ‘ நான் என் படத்தில் நடிக்க கூப்பிடும் போது முடியாது என சொல்லிவிட்டு இப்பொழுது வேறொரு படத்திற்கு  மட்டும் சம்மதம் சொல்லியிருக்கிறாய்’ என கேட்டாராம். அதனால் அவருக்காக பிரசாந்த் நடித்த படம் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ திரைப்படம் என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.