படம் ஹிட்டாகும்னு தெரியும்! இருந்தாலும் பிரசாந்த் நடிக்க மறுத்த தனுஷ் படம்
Prasanth: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான அந்தகன் படம் பிரசாந்திற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரசாந்தின் பெரும்பாலான படங்கள் அவருடைய தந்தை தியாகராஜனின் இயக்கமாகத்தான் இருந்திருக்கின்றன.
அதே போல் அந்தகன் படமும் தியாகராஜன் தான் இயக்கியிருந்தார். அதாவது எப்பொழுதெல்லாம் பிரசாந்த் துவண்டு போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு கை கொடுத்து தூக்கி விடுவது அவருடைய தந்தைதான். அந்தகன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: வசூலில் இந்திய அளவில் விஜய்தான் நம்பர் ஒன்.. அட ரஜினி, ஷாருக்கான் கூட இல்லயே!…
அடுத்ததாக சமீபத்தில் வெளியான கோட் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரசாந்த், பிரபுதேவா என 90கள் காலகட்டத்தின் முன்னணி ஹீரோக்கள் கோட் படத்தில் இருந்தாலும் அவர்களுக்குண்டான அந்த ஸ்பேஸை நல்ல முறையில் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
விஜயும் படத்தின் முதல் நாளிலேயே தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் எனக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்கிறீர்களோ அதே மாதிரி அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தாராம். எந்தவொரு ஈகோ இல்லாமல் விஜயும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: அடுத்து வேட்டையன் வராரு! ரெடியா இருங்க.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?
இந்த நிலையில் கோட் படத்தை பற்றியும் பிரசாந்தை பற்றியும் சமீபத்தில் அவருடைய தந்தை தியாகராஜன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது பிரசாந்துக்காக நான் தான் கதை கேட்கிறேன் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. கோட் படத்திற்கும் பிரசாந்த்தான் கதை கேட்டார்.
பிடித்திருக்கிறது என்று சொன்னார். சரி அப்போ நடி என்று நான் சொன்னேன் என தியாகராஜன் கூறினார். அதை போல் செல்வராகவன் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தின் கதையை முதலில் பிரசாந்திடம்தான் செல்வராகவன் தான் சொன்னாராம். கதை பிரசாந்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.
இதையும் படிங்க: 2 நாள் வசூல் எவ்வளவு?!.. பாக்ஸ் ஆபிசில் கோட் ஆக மாறிய தளபதி!..
ஆனால் இது ஒரு ஸ்கூல் பையன் மாதிரி ஒருவன் நடித்தால் நன்றாக இருக்கும். எனக்கு செட் ஆகாது என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம் பிரசாந்த். மேலும் விஜய் என்றால் பிரசாந்திற்கு மிகவும் பிடிக்கும். இருவருமே நல்ல ஃபிரண்ட்ஸ் என்றும் தியாகராஜன் கூறினார்.