பிரசாந்த் எடுத்த அதிரடி முடிவு! ஹீரோக்களே உஷாரா இருங்க.. இனிமேதான் இருக்கு
Prasanth: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் ஸ்டாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். அஜித் விஜய் இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ஒரு முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து பல முக்கிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றி பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
காதல் மன்னனாக உலா வந்த பிரசாந்த் அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை .
இதையும் படிங்க: ஓ இதான் மேட்டரா? தெறிக்கவிட்ட விடாமுயற்சி டீம்… உங்க மனசே மனசு சார்…
அந்தகன் திரைப்படத்தின் மூலம் ஒரு சரியான கம்பேக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த். அந்தகன் படம் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்திய நிலையில் அடுத்ததாக அவருடைய அடுத்த என்ட்ரி கோட் திரைப்படம். அந்தப் படத்தில் எப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரசாந்த் கூறிய ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. வருடத்திற்கு நான்கு படங்களில் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் பிரசாந்த். அதுவும் குறிப்பிட்ட இயக்குனர்களுடன் தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லையாம்.
இதையும் படிங்க: எலே இது வேட்டையன் இல்ல அடுத்த தர்பாராம்.. லீக்கான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்
புதுமுக இயக்குனர்களாக இருந்தாலும் படத்தில் நடிக்க தயார் என்று முடிவில் இருக்கிறாராம் பிரசாந்த். இதன் மூலம் பிரசாந்த் கோலிவுட்டில் மீண்டும் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஜய் ஒரு பக்கம் அரசியலில் இறங்க அஜித் அவருடைய ரேஸ் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த பிரசாந்த் அவருடைய பழைய இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.