விஜய்க்கு நன்றி.. ‘கோட்’ படம் பற்றி இவ்ளோ சொல்லுவாருனு நினைக்கல! மனம் திறந்த பிரசாந்த்

by Rohini |
prasanth (1)
X

prasanth (1)

இந்தியன் 2 படம் ரிலீஸுக்கு முன்பு வரை எந்தவொரு பெரிய படங்களும் தமிழ் சினிமாவில் வெளியாகவே இல்லை. அதனால் இந்தியன் 2 படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்தளவு எதிர்பார்ப்பு இருந்ததோ அதைவிட பெரிய ஏமாற்றத்தை அந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுத்தது. அதனை தொடர்ந்து வரும் காலங்களில் ஏராளமான டாப் ஸ்டார்களின் படங்கள் வரிசையாக ரிலீஸாக இருக்கின்றது.

வரும் 26 ஆம் தேதி ராயன் திரைப்படம் ரிலீஸாக இருக்கின்றது. ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தங்கலான் மற்றும் அந்தகன் போன்ற படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரசாந்த் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏராளமான படங்கள் ரிலீஸாகின்றன. போட்டி என்பது இருக்கத்தான் வேண்டும்.

அப்போதுதான் ஆரோக்கியம் இருக்கும் என பிரசாந்த் கூறினார். இந்த சமயத்தில் விஜய் சாருக்கும் பிரபுதேவா சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு ஒரே ஃபிரேமில் அவர்கள் இருவருடனும் என்னையும் ஆட வைத்த வெங்கட் பிரபு, ராஜூசுந்தரம் போன்றவர்களுக்கும் நன்றி. கோட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் மல்டி ஸ்டார் பற்றி கேட்டதற்கு திருடா திருடா , கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களிலேயே நான் மல்டி ஸ்டாருடன் நடித்து விட்டேன். அதனால் இந்த சூழல் கொஞ்சம் அட்வான்ஸாக இருக்கிறது என தற்போதைய சினிமாவை பற்றி கூறினார்.

அந்தகன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் வரும் 24 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது. அது உங்களை கண்டிப்பாக எண்டர்டெயின் பண்ணும் என்றும் பிரசாந்த் கூறினார்.

Next Story