என்னுடைய பயோபிக்கை இவர்தான் எடுக்கனும்! பிரசாந்தின் ஆசையை நிறைவேற்றுவாரா?

by Rohini |
prasanth
X

prasanth

Prasanth:தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடித்த நிலையில் சில பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. அதன் பிறகு சரியான நேரம் பார்த்து அந்தகன் படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் தியாகராஜன் படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவிற்கு கெட்ட வார்த்தை சொல்லி கொடுத்த கமல்ஹாசன்… சீ!..

படம் பார்த்த அனைவருமே பிரசாந்தையும் படத்தையும் பாராட்டி வருகிறார்கள். அதுவும் அந்தகன் திரைப்படம் பிரசாந்திருக்கு 50ஆவது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரசாந்த் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க திரைப்படமாக கோட் திரைப்படம் அமைந்திருக்கிறது.

அதுவும் விஜய்யுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடித்த பிரசாந்த் எந்த மாதிரியான கேரக்டரில் கோட் படத்தில் வருகிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவருடைய பயோபிக் குறித்த ஒரு கேள்வி பிரசாந்திடம் கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்!.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட்பிரபு!.. பாவம் விட்ருங்கப்பா!…

அதற்கு பிரசாந்த் ‘ஒருவேளை என்னுடைய பயோபிக்கை எடுத்தால் அதில் பிரசாந்தாக நான்தான் நடிப்பேன் என்றும் என்னுடைய பயோபிக்கை நெல்சன் அல்லது லோகேஷ் கனகராஜூ எடுக்க வேண்டும்’ எனவும் கூறியிருக்கிறார். ஏனெனில் நெல்சனை பொருத்தவரைக்கும் டார்க் காமெடிக்கு பேர் போனவர்.

lokesh

lokesh

கோகேஷைப் பொறுத்தவரைக்கும் ஆக்சன் சார்ந்த படங்களுக்கு பேர் போனவர். இவர்கள் எடுத்தால் தான் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறினார். ஆனால் எனக்கு அப்பாவாக யார் நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்கள்தான் முடிவு பண்ண வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: தங்கலானை தூக்கி சாப்பிட்ட டிமான்டி காலனி 2.. இனிமே பேசுவீங்க பிரியா பவானிசங்கர்.. படம் எப்படி இருக்கு?

இவர் சொல்வதைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் அதற்கான வேலைகளும் நடக்கும் என தெரிகிறது. அதை ஒரு வேளை அவருடைய அப்பாவே எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிரசாந்தை சிறு வயது முதல் அணு அணுவாக பார்த்து ரசித்தவர் அவருடைய அப்பா தான். அதனால் தன்னுடைய மகனின் பயோபிக் எந்த மாதிரி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் அவரும் மிகவும் அக்கறையுடன் தான் இருப்பார்.

Next Story